எழுத்தாளர் பக்கம் – Puradsi https://puradsi.com Tamil News Portal Sat, 13 Jul 2019 08:18:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.3.2 கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவியர்? ஆதாரங்களுடன் கூடிய அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வுப் பதிவு: உஷார் மக்களே!! உஷார்!! https://puradsi.com/kanavanukku-theriyamal/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kanavanukku-theriyamal Sat, 13 Jul 2019 08:18:15 +0000 https://desktop.puradsi.com/?p=61173

“பேஸ்புக் வந்து நாசமாப் போவோர்” எனும் பேஸ்புக் குழுமத்தின் ஊடாக  அறிமுகமான சக நண்பி ஒருவரின் பதிவுகளைச் சமீப காலமாக காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் அவருடைய முகப் புத்தகத்திற்கு ஒரு குறுந் தகவல் அனுப்பிப் பார்த்தேன். தான் இப்போது பேஸ்புக்கில் எழுதுவதை நிறுத்தி விட்டு புதிதாக  ஒரு சாட் குறூப் (Chat Group) திறந்திருப்பதாக பதில் அனுப்பி, என்னையும் விரும்பினால் சாட் குறூப்பிற்கு வருமாறு அழைத்தார் அந்த நண்பி. அட இது என்ன சாட் குறூப் […]

The post கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவியர்? ஆதாரங்களுடன் கூடிய அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வுப் பதிவு: உஷார் மக்களே!! உஷார்!! appeared first on Puradsi.

]]>

“பேஸ்புக் வந்து நாசமாப் போவோர்” எனும் பேஸ்புக் குழுமத்தின் ஊடாக  அறிமுகமான சக நண்பி ஒருவரின் பதிவுகளைச் சமீப காலமாக காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் அவருடைய முகப் புத்தகத்திற்கு ஒரு குறுந் தகவல் அனுப்பிப் பார்த்தேன். தான் இப்போது பேஸ்புக்கில் எழுதுவதை நிறுத்தி விட்டு புதிதாக  ஒரு சாட் குறூப் (Chat Group) திறந்திருப்பதாக பதில் அனுப்பி, என்னையும் விரும்பினால் சாட் குறூப்பிற்கு வருமாறு அழைத்தார் அந்த நண்பி. அட இது என்ன சாட் குறூப் என்று திண்டாடிய எனக்கு , அந்தக் குறூப்பிலிருந்து  வாட்ஸ் அப் சாட் ரூமுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதுவும், தமிழ் பெயரில் வாட்ஸ் அப்பில் சாட் ரூம் என்று விழியினை உருட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்த நண்பியின் வாட்ஸ் அப்பிற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அழைப்பு வந்தது.

அழைப்பினை மேற் கொண்டால் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம் எனும் ஆவல் மேலெழ அவரின் வாட்ஸ் அப்பிற்கு அழைப்பினை மேற்கொண்டேன்.நம்மாளுங்க “காஞ்ச மாடு – – – – – – ” என்று ஒரு பழ மொழி சொல்வார்களே! அது போன்று வாட்ஸ் அப் சாட் ரூம் பற்றிய அறிவுகள் கொஞ்சம் குறைவாக இருக்கிறதே என எண்ணி இந்த விடயங்களையும் அறியும் ஆவலோடு நண்பியுடன் பேச ஆரம்பித்தேன். இனி இந்த நண்பியின் பெயரை ஜூலியா என்று வைத்துக் கொள்வோமா? ஜூலியாவிடம் சாட் ரூம் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் எனக்குள் எழ என் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன். “என்னமோ போங்க ராஜேஷ் நீங்க இந்த மாதிரி விடயங்களை எடுத்து எழுதி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினால் பல பெண்களின் வாழ்க்கையினைச் சீரழிக்கப் போகிறீர்களா?” என்று புலம்பினார்.அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
கொஞ்சம் நிதானமாக கட்டுரையினை நீ வரைய வேண்டும் எனக் கூறி; “நீ என்ன எழுதினாலும் அடுத்த நிமிடமே, சூடு சுறணையற்ற நாதாரி இணையத் தளங்கள் சில உன் கட்டுரையினையும் வெட்கம் மானமின்றி கொப்பி பேஸ்ட் செய்து மகிழப் போகிறார்களே!

இதனால் உனக்கு என்ன பயன் என்று கேட்டவரிடம்; “பல பெண்களாவது இனிமேல் இந்த வலையில் விழுவதிலிருந்து தப்பிப்பார்கள்” என்றதும் என் வழிக்கு வந்து, பேச்சைத் தொடங்கினார் ஜூலியா. ஏற்கனவே பல white group வாட்ஸ் அப் சாட் ரூம்களில் பல பெண்களின் வாழ்க்கையைப் படு குழியில் தள்ளும் நோக்கில் பல கும்பல்கள் தம் கை வரிசையினைக் காட்டி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் அண்மையில் தமிழ்——- எனும் பெயரில் பெண்களுக்கும், அங்கே சாட் பண்ணும் ஆண்களுக்கும் தனி நபர் உரிமையினைப் பாதுகாக்கும் வகையில் தன் வாட்ஸ் அப் சாட் ரூம் அமைய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் தான் வாட்ஸ் அப் சாட் ரூம் ஆரம்பித்ததாக சொன்னார் ஜூலியா. “சாட் ரூமுக்கு யார் யாரெல்லாம் வருவாங்க என்று? கேட்டேன்.” “ஆண்களும் பெண்களும் வருவார்கள்! அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் கணவன் வேலைக்குச் சென்றதும் தம் கைங்கரியத்தினை அரங்கேற்றும் நோக்குடனும், வெளியூரில் கணவன் உள்ள பெண்களும் தம் பொழுது போக்கிற்காகவும் சாட் ரூமை நாடுவார்கள்” என்று சொன்னார் ஜூலியா. கலியாணம் கட்ட வேண்டும் எனும் ஆவலில் இருந்த நான் இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் பம்மிக் கொண்டா இருப்பேன்? “அப்படீன்னா சாட் ரூமில் பிகருங்க மாட்டுமா?” என ஒரு கேள்வி கேட்டேன்.

“ஆம் நிச்சயமாக மாட்டும்! நீ பேசுறதைப் பொறுத்து!” எனச் சொல்லிய ஜூலியா, பொண்ணுங்களுடன் பேசுவதற்கான ஐடியாக்களையும் சொல்லிக் கொடுத்தார். அடியேனும் ஒரு தற்காலிக வாட்ஸ் அப் அக்கவுண்டை உருவாக்கி சாட் ரூமினுள் நுழைந்தேன். எப்படி நம்ம வலையில் விழ வைக்கலாம் என நினைத்த எனக்கோ சாருநிவேதிகா பற்றிய நினைப்பு மனதில் வர; இந்த சாட் ரூம்கள் பற்றி அலசிப் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் ஆவல் மேலிடவே மீண்டும் ஜூலியாவைத் தொடர்பு கொண்டேன்.அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

தமிழ் மொழியில் வாட்ஸ் அப் தமிழர்களால் நடாத்தப்படும் சாட் ரூம்கள் பற்றி அறியவேண்டுமானால் நீ மலேசியாவினை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தமிழ்—– சாட் ரூமில் உள்ள யாரையாச்சும் தொடர்பு கொள்ள வேண்டும்” என ஆலோசனை கொடுத்து, தொடர்பு கொள்வதற்கான வாட்ஸ் அப் நம்பரையும் கொடுத்தார் ஜூலியா. நானும் அங்கே உள்ள முரளி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கினேன். ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டு பிடித்து ரகசியங்களைச் சொல்லத் தயங்கிய முரளி பின்னர் ஜூலியாவின் அழைப்பினைத் தொடர்ந்து மெதுவாக திடுக்கிடும் தகவல்களைச் சொல்லத் தொடங்கினார். “தம் வாட்ஸ் அப் சாட் ரூமின் நோக்கம் பெண்களை மடக்கி எம் வலையில் விழ வைத்து அனுபவித்து மகிழ்வது தான்” என்று பச்சையாகப் பேசினார். அப்போ நான் கேட்டேன்! “எப்படி பொண்ணுங்களை மடக்குவீங்க என்று?

“முதலில் இங்கே சாட் ரூமிற்கு வரும் தமிழ் நண்பர்கள் பொது வெளியில் பெண்களோடு பேசத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களோடு பிரைவேட் சாட்டிங்கிற்குப் போனதும் மெது மெதுவாக போன் நம்பரையோ அல்லது பேஸ்புக் முகவரியினையோ கேட்பார்கள். திருமணமான பெண்கள், கணவன் வெளியூரில் உள்ள பெண்கள் தான் பொதுவாக இந்தச் சாட் ரூம்களை நாடுவதால், வீட்டில் மாட்டிக்காது தப்பிக்கும் நோக்கில் சாட் பண்ணிய HISTORY இனை அழிப்பது முதல், மொபைலில் ஒரு விபரமும் சேமிக்காது கணவனிடமிருந்து தப்புவதற்கான வழி முறைகளையும் முதற் கட்டமாகச் சொல்லிக் கொடுப்போம் என்று கூறினார் முரளி. முதல் நாள் சாட்டிங்கில் பொதுவான விடயங்களைப் பேசியதும் அடுத்த நாள் சாட்டிங்கில் மெது மெதுவாகப் படங்களை அனுப்பத் தொடங்குவோம்.

முதலில் பூக்களின் படங்களை அனுப்பிப் பார்ப்போம், அதற்குப் பொருத்தமான பதில் பெண்கள் பக்கமிருந்து வந்தால், அதற்கு அப்புறமா உணர்ச்சியினைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் இதயப் படத்தினை அனுப்பிப் பார்ப்போம். அதற்கும் சாதகமாக இதயம் படம் மறு பக்கமிருந்து கிடைத்தால் அடுத்த நொடியே முத்தம் கொடுக்கும் கார்ட்டூன் படங்களை அனுப்புவோம். பின்னர் என்ன? நேரடியாகவே மேட்டர் பற்றிப் பேசத் தொடங்கிடுவோம். பொதுவாக இங்கே வரும் பெண்களிடம் நாம் கேட்கும் கேள்வி! “கணவன் அந்த விடயத்தில் எப்படி என்று?” கணவன் நன்றாகத் தான் தாம்பத்திய சுகம் கொடுக்கிறார் என்று பெரும்பாலான பெண்கள் பதில் கூறுவார்கள். “அப்போது குறுக்கிட்ட நான்; அப்படீன்னா அவங்க ஏன் சாட் ரூமை நாடனும்? எனக்குப் புரியாத புதிராக இருக்கிறதே என்று கூறினேன்.

தனக்கும் புரியாத புதிராகத் தான் இந்த விடயம் இருப்பதாக கூறினார் முரளி. ஒரு வேளை நாகரிக மோகத்திலும் வரலாம் என்று கூறினார். பசுவிற்குத் தெரியாமலே பாலைக் கறக்கிற ஜாதி தானே நாம என்று கூறிய முரளி; தாம்பத்திய உறவினைப் பற்றிப் பேசத் தொடங்கி, கணவனின் அன்பினைப் பற்றி அலசும் நாம், பின்னர் நேரடியாகவே போன் செக்ஸ் பத்திப் பேசத் தொடங்கிடுவோம். பொண்ணுங்களும் அந்த நிமிட சுகத்திற்காகப் போன் செக்ஸ் பண்ண ஒத்துழைப்பாங்க! இது நம்மைப் போன்றோருக்கு ஜாலி தானே எனக் கூறினார் முரளி. பெண்களோடு பேசத் தொடங்கும் போது நாம் செய்கின்ற முதல் வேலை, அதனை ரகசிய மென் பொருட்கள் மூலமாக ஒலிப்பதிவு செய்வது தான் என்று கூறினார்.

“அப்படி ஒலிப்பதிவு செய்து வைத்தால் தானே நாம அவங்களை நேரில பார்த்துப் பேசி. அவர்கள் உடல் உறவிற்கு மறுத்தாலும் கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட முடியும் என்று கூறினார் முரளி.” ஒலிப்பதிவுகள் ஏதாவது இருந்தால் கொடுக்க முடியுமா என்று கேட்டதும் மூன்று மாதிரிக்களை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார் முரளி. போன் செக்ஸ் என்பது ஆங்கிலேயர்கள், மேலைத் தேச நாட்டவர்களிடம் மிகவும் பிரபல்யமானது எனவும், முகம் தெரியாமல் ஒருவரை ஒருவர் நினைத்து தொலைபேசி மூலமாக பேசிப் பேசி இன்பம் காண்பது தான் போன் செக்ஸ் என்றும் இந்த மாதிரி நடவடிக்கைகளுக்கு தாம் பேஸ்புக் messanger இனைத் தான் பயன்படுத்துவோம்” என்றும் கூறினார் முரளி.அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நம்மளோட வாட்ஸ் அப் சாட் ரூம் மலேசியாவில இருந்தாலும், இலங்கை இந்தியப் பெண்கள் தான் அதிகமாக நம்ம சாட் ரூமுக்கு வருவாங்க. இலங்கை இந்தியாவில் உள்ளோர் தமக்கு விருப்பமான நண்பர்களோடு உரையாடித் தொலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, தாம் ரகசியமாகச் சாட் ரூமினைக் கண்காணித்து அங்கே பரிமாறப்படும் தகவல்களை, சேமிப்பதோடு, ஒலிப்பதிவும் செய்து வைத்துக் கொண்டு பின்னர் பெண்களோடு பேசத் ஆரம்பிப்போம். அப்போது எம் வலையில் யாராவது விழவில்லை என்றால் உடனடியாக இந்த ஒலிப் பதிவுகளை பாலியல் தளங்களில் பரப்பிவிடுவோம் எனக் கூறி அச்சுறுத்துவோம். இத் தளங்களுக்கு வரும் பெண்களில் பலருக்கு உள் மனதில் விருப்பம் இருந்து வீட்டிற்குப் பயந்து எம்மோடு வர மறுத்தாலும் ஒலிப்பதிவுக்குப் பயந்து ஒத்துக் கொள்வார்கள் எனக் கூறினார் முரளி.

அழகான உடலமைப்புக் கொண்டோரை நாம் நண்பர்கள் சிலர் ருசித்து விட்டு, எம் ஏனைய நண்பர்களுக்கும் ருசி பார்க்க மிரட்டிப் பணியவைத்து அனுப்பியிருக்கிறோம் எனவும் கூறினார் முரளி! “மலேசியாவில் இருக்கும் நீங்கள் இலங்கை – இந்திய நாடுகளில் வாழும் பெண்களை எப்படி அணுக முடியும்?” எனக் கேட்ட போது; “தம் நண்பர்கள் இலங்கை இந்தியாவில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தம் வேலை முடித்ததும் எமக்கான பணத்தினை அனுப்பி வைப்பார்கள் எனக் கூறினார் முரளி. நாம் மலேசியா, மற்றும் சிங்கப்பூரில் எம் வலையில் விழுவோரை மாத்திரம் கண்காணிக்கிறோம் எனக் கூறினார் முரளி! இந்த சாட் ரூமில் மிகவும் பிரபலமான பாடல் என்ன தெரியுமா என்று கேட்டு ஒரு பாட்டுச் சொன்னார் பாருங்க. “ஆனந்தம் ஆனந்தம் பாடும்! மனம் அடுத்தவன் மனைவியை நாடும்!” என்ன கொடுமை இது என எனக்குள் நானே திட்டித் தீர்த்தேன்.

தமது சாட் ரூம்களில் பகலில் மதிய வேளையில் நாற்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் ஆன்லைனில் இருப்பார்கள் எனவும், இரவில் அறுபது முதல் எழுபது வரையான நண்பர்கள் வந்து கூடுவார்கள் எனவும் கூறிய முரளி, இலங்கை, இந்தியா, மற்றும் ஏனைய வெளி நாடுகளில் தமிழில் இது போன்று பல சாட்டிங் தளங்கள் உள்ளதாகவும் அங்கும் இத்தகைய செயல்களே நடப்பதாகவும் கூறினார். பொது இடத்தில் சாட் பண்ணுதல், பாடல் பாடி மகிழுதல் முதலிய செயல்களில் தொடங்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பின்னர் தனி நபர் சாட்டிங்கினூடாக (Private Chat) அந்தரங்க விடயங்களைப் பேசத் தொடங்கியதும் சூடு பிடிக்கத் தொடங்கி விடும் என்றார். சாட் பண்ணி கணவனிடம் அகப்பட்ட பெண்களில் சிலரது வாழ்க்கை விவகாரத்து எனும் நிலையினை அடைந்திருப்பதாகவும் வருத்தத்தோடு கூறினார்.

தம்மைப் போன்ற பலருக்கு பணம் தேவை! அதற்காக இப்படிச் செய்வது தவிர்க்க முடியாது என்றவரிடம், ஏன் வேறு ஆன்லைன் வேலைகளைச் செய்து சம்பாதிக்க முடியாதா எனக் கேள்வி கேட்டேன். அவரோ நோகாமல் நிறைய உழைக்கனும் என்றால் இந்த மாதிரியான வழிகள் தான் பயன் தரும் என கொஞ்சம் கூட ஈவிரக்கம் இன்றிப் பதிலளித்தார். அவர் வழங்கிய தகவல்களுக்கு நன்றி கூறும் போது, குறுக்கிட்ட அவர், என்னமோ போங்க! நீங்க இந்த தகவல்களையெல்லாம் சேகரித்து ஆதாரப்படுத்தி எழுதும் போது, சில மானங்கெட்ட ஈனச் செயல் புரியும் இணையத் தளங்கள் உங்களின் புரட்சி வானொலிப் பக்கத்தில் வெளியான பதிவுகளை அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு மகிழ்கிறார்களே! முதல்ல அதனைக் கண்டியுங்க என ஆதங்கத்தோடு சொல்லி விடை பெற்றார் முரளி!அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இப்படியும் நம் சமூகத்தில் சிலரா என வருத்தத்துடன் இவ் விடயத்தினைப் பதிவாக எழுதுவது தொடர்பில் நண்பர்களுடன் உரையாடிப் பார்த்தேன். பலரது வேண்டுகோள் ஒலிப் பதிவுகளை இணைத்து எம் கலாச்சார சீரழிவினையும், தனி நபரை அவமதிக்கும் செயலையும் செய்ய வேண்டாம் எனும் அன்புக் கட்டளையினைத் தாங்கி வந்த காரணத்தினால் ஒலிப்பதிவுகளை இப் பதிவில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியூரில் இருக்கும் கணவன்மார் யாருக்காவது உங்கள் மனைவி மீது சந்தேகம் ஏற்படின் அவர் பயன்படுத்தும் கணினியினைக் கண்காணிக்கும் மென் பொருட்களை நிறுவலாம். பேஸ்புக், மற்றும் ஏனைய சாட்டிங் தளங்களை உங்கள் வீட்டுக் கணினி மூலம் பார்க்க முடியாதவாறு Block பண்ணும் மென் பொருட்களை நிறுவலாம்.

கணவன்மாரும் தம் மனைவியின் மீது சந்தேகம் வரின் தம் வீட்டு இணைய உலவியில் உள்ள Browsing History இனைச் பரிசோதித்துப் பார்க்கலாம். ஆனால் கணவன் மார் மனைவிக்குத் தெரியாமல் செய்தால் ஒன்னுமே பண்ண முடியாதுங்க! நேராக கோர்ட் வாசலுக்குத் தான் போக முடியுமுங்க. ஹி…ஹி..!
நன்றி: பதிவரும் சாட் ரூம் உரிமையாளருமான ஜூலியா மற்றும் முரளி!
புரட்சி வானொலிக்காக திருச்சியிலிருந்து ராஜேஷ்.

The post கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவியர்? ஆதாரங்களுடன் கூடிய அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வுப் பதிவு: உஷார் மக்களே!! உஷார்!! appeared first on Puradsi.

]]>
பெண் உறுப்பு என்றால் என்ன..!? — கயல்விழி https://puradsi.com/kayalvizhii/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kayalvizhii Mon, 17 Jun 2019 16:37:30 +0000 https://desktop.puradsi.com/?p=59859

பறவைகள் பலவிதம் என்பது மாறி மனிதர்கள் பலவிதம் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என்பதை கண்களால் பார்கின்றோம். கற்பழிப்புகள், பாலியல் சீண்டல்கள், பச்சை குழந்தைகளை கொன்று புதைத்தல் மர்ம பிரதேசங்களை சிதைத்தல் இப்படி ஏகப் பட்டவற்றை அன்றாடம் படிக்கிறோம். இவை ஏன் நடக்கிறது.!? ஒரு சிலர் ஆண்களின் காம வெறி என்கிறார்கள். உண்மையில் ஆண்களில் இந்த வெறிக்கு காரணம் என்ன.? வீட்டில் மனைவி இருக்கிறாள், வீதியில் விபச்சாரி இருக்கிறாள் காமம் மட்டும் அவன் நோக்கம் என்றால் இவர்களில் […]

The post பெண் உறுப்பு என்றால் என்ன..!? — கயல்விழி appeared first on Puradsi.

]]>

பறவைகள் பலவிதம் என்பது மாறி மனிதர்கள் பலவிதம் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என்பதை கண்களால் பார்கின்றோம். கற்பழிப்புகள், பாலியல் சீண்டல்கள், பச்சை குழந்தைகளை கொன்று புதைத்தல் மர்ம பிரதேசங்களை சிதைத்தல் இப்படி ஏகப் பட்டவற்றை அன்றாடம் படிக்கிறோம்.

இவை ஏன் நடக்கிறது.!? ஒரு சிலர் ஆண்களின் காம வெறி என்கிறார்கள். உண்மையில் ஆண்களில் இந்த வெறிக்கு காரணம் என்ன.? வீட்டில் மனைவி இருக்கிறாள், வீதியில் விபச்சாரி இருக்கிறாள் காமம் மட்டும் அவன் நோக்கம் என்றால் இவர்களில் ஒருவரை அவன் தேர்வு செய்ய முடியும்.

அப்படியானால் அவனுக்கு என்ன ? உண்மையில் இந்த ஒவ்வொரு தவறுக்கும் இப்படியான ஆண் மகனை பெற்ற தாய் பதில் கூற வேண்டும்.”எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அன்னை வளர்பினிலே” இது உண்மையான வரிகள்.

எந்த தாயும் தன் மகனிடம் வேறு பெண்ணை கற்பழிக்க சொல்வதில்லை. ஆனால் ஆரம்ப வளர்ப்பு அப்படி ஆகிவிடுகிறது. தங்கை வளர்ந்துவிட்டாள் அவளுடன் தூங்காதே, அக்கா மடியில் அமராதே.. தங்கையை கட்டிப் பிடிக்காதே இப்படி சொல்லி சொல்லி பிரிக்க ஆரம்பிக்கின்ற போது ஆரம்பமாகிறது முதல் வன்மம்.

பெண்ணை கட்டிப் பிடித்தால் ஏதோ நடக்கும் அது என்ன.? தெரியாமல் போகிறது. வளர்ந்த பின் திருமணம் குழந்தை வாழ்க்கை ஆனாலும் சிறுவயது எண்ணங்கள் சைக்கோவாக்கி வெறியை உண்டாக்கிவிடுகிறது. அதன் பின் தன்னை சிறுவனாக நினைத்து சிறுமியை வேட்டையாடி விடுகின்றான்.

அடுத்தது. அடுத்த வீட்டுக் காரர்களுடன் தினமும் சண்டையிடும் பெற்றோர் அவன் மகள் வீணா போகும், மகன் அப்பிடி போயிடுவான் இப்படி திட்டி தீர்க்க வன்மம் அங்கும் வருகிறது. சின்ன விடயத்திற்கும் எதிரியின் குடும்பத்தை அழிக்க வேண்டும் அதுவும் துடிக்க வைக்க வேண்டும்.

இதுவும் பிஞ்சு மனதில் வஞ்சம் நிரப்பும் பெற்றோர் தான். முதலில் வீட்டில் தாய் தன் சகோதரிகளுடன் ஆண்பிள்ளையை நெருங்க விட வேண்டும். பெண்கள் உன் அம்மா போல், அக்கா போல், தங்கை போல் தான். அவர்களிடம் வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர வைக்க வேண்டும்.

மாதவிடாய் உட்பட பெண்களுக்கு அதிக வலி கொடுக்கும் விடயங்களை மகனுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். ஆணுக்கு பெண் எதிரியல்ல மாறாக ஆண் பெண்ணுக்கு வேலி என்பதை உணர்த்த வேண்டும். இவை அனைத்துமே உங்கள் மகனுக்கு 10 வயதாகும் முன்பு சொல்லி கொடுத்து விடுங்கள்.

அதன் பின் உங்கள் மகன் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பான். இது தான் ஆண் மகன். நல்ல தாயிடம் வளரும் மகனுக்கு பெண் உறுப்பு என்பது சிதைக்கப் பட கூடாத பொக்கிஷமாக தெரியும். மனைவியை கூட மிருகமாக அணுக மாட்டான். அதனால் கருவில் இருக்கும் போதே உங்கள் ஆண் குழந்தைக்கு பெண்ணின் புனிதத்தை கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடுங்கள்..!

The post பெண் உறுப்பு என்றால் என்ன..!? — கயல்விழி appeared first on Puradsi.

]]>
ஆபாச வெறி கொண்டு ஆன்லைனில் அலைபவரா நீங்கள்? கண்டிப்பா 1 நிமிடம் இதைப் படியுங்க!! https://puradsi.com/online-search/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=online-search Sun, 16 Jun 2019 05:06:05 +0000 https://desktop.puradsi.com/?p=59670

அன்பிற்குரிய சொந்தங்களே.. எல்லோரும் நல்லா இருக்கீங்களா? உங்க எல்லோருக்கும் அட்வைசு செஞ்சு எழுதுமளவிற்கு நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லைங்க. என் மனசில பட்ட சில விசயங்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதுகின்றேன். வாங்க பதிவுக்கு போகலாம். எம் தமிழர்களிற்கு என சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. அவ் இயல்புகள் உலகினில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இல்லாத தனித்துவ இயல்புகள் என்றும் கூட சொல்லிக்கலாமுங்க. தமிழர்கள் பூர்வீகமாக அதிகளவில் செறிந்து வாழும் […]

The post ஆபாச வெறி கொண்டு ஆன்லைனில் அலைபவரா நீங்கள்? கண்டிப்பா 1 நிமிடம் இதைப் படியுங்க!! appeared first on Puradsi.

]]>

அன்பிற்குரிய சொந்தங்களே.. எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
உங்க எல்லோருக்கும் அட்வைசு செஞ்சு எழுதுமளவிற்கு நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லைங்க. என் மனசில பட்ட சில விசயங்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதுகின்றேன். வாங்க பதிவுக்கு போகலாம். எம் தமிழர்களிற்கு என சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. அவ் இயல்புகள் உலகினில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இல்லாத தனித்துவ இயல்புகள் என்றும் கூட சொல்லிக்கலாமுங்க.

தமிழர்கள் பூர்வீகமாக அதிகளவில் செறிந்து வாழும் நம்ம தமிழ் நாடும், இலங்கையும் ஏன் இன்னமும் உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது பெரும் வளர்ச்சியடையவில்லை அப்படீன்னு யாராச்சும் என்னைக்காச்சும் நெனைச்சு பார்த்திருக்கீங்களா? வாருங்க..உட்கார்ந்து பேசுவோம். நான் ரூம் போட்டு யோசித்து பார்த்தேனுங்க. ஒரு சில உண்மைகள் என் மனதில் தென்பட்டது. தமிழர்களிடம் பாலியல் வெறித்தனமும், மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனமான அரசியல் வெறியும் இருக்கும் வரை தமிழினம் இந்த ஜென்மம் அல்ல, இன்னும் இருபது ஜென்மம் எடுத்தாலும் உருப்படாதுங்க.

“மறைக்கின்ற பொருளுக்குத் தான் மதிப்பதிகம் என்பார்கள்” இது கவிஞர் வைரமுத்துவின் வரி. இந்த வரியைப் படிச்சனும் அச்சச்சோ நீங்க எல்லா தமிழர்களையும் கலாச்சாரத்தை பத்தி கவலைப்படாது மறைக்காம வீதி உலா வாங்கன்னு சொல்றாருன்னு தப்பா நெனைச்சுப்புடாதீங்க. வெள்ளைக்காரனைப் பொறுத்த வரை ஒவ்வொரு மனித உணர்வுகளுக்கும் தனியான நேரம், தனியான நாள், தனித்துவமான அம்சங்கள் எனப் பல உண்டு. நம்ம ஊரில வயசுக்கு வந்ததும் பொண்ணுங்க கூட நாம பேசவே முடியாது. பொண்ணுங்களும் நம்ம கூட பேசமாட்டாங்க.

நம்மாளுங்க கலாச்சரத்தின் பெயரால் செய்யும் மிக மிக இழிவான மூட நம்பிக்கை ஆணையும் பெண்ணையும் நண்பர்கள் போல பழக அனுமதிக்காது ஓர் ஆணுடன் பெண் பேசுவதோ அல்லது பெண்ணுடன் ஆண் பேசுவதோ தவறு என்று கூறி காமக் கண் கொண்டு ஆணும் பெண்ணும் பேசினால் காமத்துடன் நோக்குகின்றது எம் சமூகம். ஆண்களும் பெண்களும் சின்ன வயசு முதல் ஒன்னாக கல்வி கற்கும் காலத்தில நம்ம சமூகம் எதிர்த்தாப்பில இருக்கிற ஸ்கூல் பொண்ணை எதிர்ப்பாலின ஆளாகச் சித்தரிக்கின்றதேயன்றி அந்தப் பெண்ணும் சக மனுசி – சக தோழி எனும் உண்மையினை உரைத்து சகஜமாக ஆணையும் பெண்ணையும் பழக அனுமதி வழங்க மறுக்கிறது எம் சமூகம்.

இங்கே சகஜமாக என்றோர் வார்த்தையினை பார்த்ததும் நீங்க விபரீதமான அர்த்தத்தில் இரட்டை அர்த்தத்துடன் நீங்கள் நோக்கினால் நான் அதற்கு பொறுப்பாளி கிடையாது. ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகுறாங்க என்று சொன்னாலே அட.. அவர்கள் தம் பாலியல் தேவையினை நிறைவேற்ற தான் பழகுறாங்க என்று பேசிக்கிறது நம்ம சமூகம். சின்ன வயசில இருந்து எதிர்ப்பாலாரை இவர் நீ திருமணம் செய்யப் போகும் எதிர்ப் பால் வர்க்கம் எனக் கூறி கூறியே ஒரு மாணவனை காமுகன் போல எதிர்த்தாப்பில இருக்கும் பெண்ணை பார்த்து சிந்திக்க வைக்கிறது எம் சமூகம்.

ஆணைப் பெண் சக மனுசனாகவும், பெண்ணை ஆண் சக மனித ஜென்மமாகவும் உணரும் காலம் என்னைக்கு நம்ம நாடுகளில் வருதோ அன்னைக்கு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், பாலியல் வல்லுறவுகள், ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்களின் உணர்வுகள் யாவும் ஒடுங்கி தமிழன் நாட்டை முன்னேற்றுவது பத்தி சிந்திக்க ஆரம்பிப்பானுங்க. அப்படி ஒரு நாள் வருமா? வருமா? சொல்லுங்கள்!!

The post ஆபாச வெறி கொண்டு ஆன்லைனில் அலைபவரா நீங்கள்? கண்டிப்பா 1 நிமிடம் இதைப் படியுங்க!! appeared first on Puradsi.

]]>
கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி! https://puradsi.com/srilankan-style-kavithai2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=srilankan-style-kavithai2 Sun, 16 Jun 2019 02:59:20 +0000 https://desktop.puradsi.com/?p=59652

கனகரின் கோப்பிறேசன் கால் போத்தல் சாராயம் மப்பேறியதும் மனதில் அளவற்ற மகிழ்ச்சியூட்ட மச்சான்ர குறைச் சுருட்டு! மாலையில் கனிவூட்டும் வடிசாலை பனங் கள்ளு இவை யாவும் இருந்தாலும் இணையில்லா இன்பம் தரும் இளஞ் சிரிப்பு குமுதினியை போல் என் இளமைக்கு ஈடாகுமா? அணைக்கின்ற போது கால் நகத்தால் கோடு கீறி கண்களினை மையலுறச் செய்யும் கன்னியவள் இனிக்கும் அரியதரம் – செல்லமாய் அடித்தாலும் அவளுடன் வாழ வேண்டும் என மனமோ எண்ணிக் கொள்ளும் பல தரம்! உதடு […]

The post கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி! appeared first on Puradsi.

]]>

கனகரின் கோப்பிறேசன்
கால் போத்தல் சாராயம்
மப்பேறியதும் மனதில்
அளவற்ற மகிழ்ச்சியூட்ட
மச்சான்ர குறைச் சுருட்டு!
மாலையில் கனிவூட்டும்
வடிசாலை பனங் கள்ளு
இவை யாவும் இருந்தாலும்
இணையில்லா இன்பம் தரும்
இளஞ் சிரிப்பு குமுதினியை போல்
என் இளமைக்கு ஈடாகுமா?

அணைக்கின்ற போது
கால் நகத்தால் கோடு கீறி
கண்களினை மையலுறச் செய்யும்
கன்னியவள் இனிக்கும் அரியதரம் – செல்லமாய்
அடித்தாலும் அவளுடன் வாழ வேண்டும் என
மனமோ எண்ணிக் கொள்ளும் பல தரம்!

உதடு கடிக்கையில் உவர்ப்பும் கசப்பும் சேர்த்து தரும்
உயிர் மூச்சவளின் இதழ்களோ டிப்பிளிசன் மாம்பழம்!
அணைக்கையில் இணை பிரியா உயிராக என்னுடன்
ஒட்டிக் கொள்ளும் அவளோ நிறத்தில் பாலப் பழம்!

தாழ் போடா வீடு – மெதுவாக
காலாட்டி நீயோ எப்போது
உள்ளே வருவாய் என
என் மனமும் நாடும்!
ஆளில்லா நேரம் அச்சம் விட்டு விலகிட
அக்கராயன் குளக் கட்டும் பார்த்து சிரிக்கும்!
அடியே குமுதினி நீயும் சைக்கிளில்
குறுக்காலே போகையில் மனமோ உன்
குறு குறு கனிகளின் துள்ளல் பார்த்து ரசிக்கும்!

கலியாணம் கட்டிட கச்சேரிக்கு போவோம் என்றேன்
பலியாடு நானாகிட உனக்கும் ஆசையோ என்றாள்!
அறியாத வயது! ஆனாலும் நீயோ எனை அடிக்கடி
தவிக்க வைக்கும் அந்த மாதிரி அழகி என்றேன்!
வளையாத மூங்கில் போல நீ நிமிர்ந்து நிற்கின்றாய்
வரிசையிலே உனக்காக பெண்கள் பலர் காத்திருக்கின்றார்!
இது கூட தெரியாது ஏன் நீயும் எனை பார்த்து
ஏகாந்த இராகம் இசைக்கின்றாய் என்று கேட்டாள்-
எனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்!

கொப்பரையும் விட்டு! கொம்மாவையும் விட்டு
கோதை நீ ஓடி வாடி என்று இரைஞ்சி கேட்டேன்!
மப்பினில் கவிதை பாடும் என் மன்னவா – உன் மனதில்
மங்கை என் மீதான ஆசை இன்னமும் தீரலையா?
தப்பது செய்த பின்னரும் என்னை தாளையடி மீன் போல
தள்ளி வைக்க மாட்டியா கிறுக்கா?
இப்பவே வருகிறேன்! ஆனாலும் ஒரு கண்டிசன்!
இரணைமடுக் குளக்கட்டில் நாமிருவரும்
இரவிரவாய் நீந்தி மகிழனும் என்றாள் – அடியே
அது என்ன இடுப்பளவு தண்ணீர் உள்ள குளமா?
ஆழம் அதிகமுள்ள குளமடி என்றேன் – அத்தான் உங்களுக்கு
அந்த மாதிரிக் கருத்தும் புரியலையே!
நீங்கள் ஓர் மொக்கு என்று கடிந்தாள் – என்
இதழை இறுக்கி கடித்தாள்!

அரும்பத விளக்கங்கள்/ சொல் விளக்கங்கள்:

கோப்பிறேசன்/ கோப்பிரேசன்: Corporation – ஈழத்தில் கள்ளுத் தவறணை மற்றும் சாராய பாரினைச் செல்லமாக குறிக்கும் சொல்.
மப்பேறியதும்: போதை ஏறியதும்.
வடிசாலை: கள்ளு வடித்து விநியோகம் செய்யுமிடம்.
அரியதரம்: சீனிப் பணியாரம் அல்லது இனிப்பாக சிவப்பு அரிசி மாவில் செய்யப்படும் பணியாரம்/ பலகாரம்.
டிப்பிளிசன் மாம்பழம்/ மாங்காய்: கிளிச் சொண்டன் மாங்காய்.
பாலப் பழம்: வன்னியில் கிடைக்கும் இனிப்பு நிறைந்த மஞ்சள் நிற சிறிய அளவிலான பழம்.
அக்கராயன் குளக் கட்டு: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் குளத்தின் அணைக் கட்டு.
குறுக்காலே போதல்: ஒருவரைக் கடந்து போதல். அல்லது குழப்பம் விளை விக்கும் நோக்கில் குறுக்கே செல்லுதல்.
கச்சேரி: மாவட்டத் திணைக்களம். அல்லது அரசாங்க அலுவலகம். இங்கே கச்சேரி Register Office எனும் பொருளில் வந்துள்ளது.
அந்த மாதிரி அழகி: சும்மா ஜோரான பிகரு அல்லது சூப்பரான அழகி!
கொப்பர்: அப்பா. அப்பன், அல்லது தந்தை.
கொம்மா: அம்மா.
தாளையடி மீன்: ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் உள்ள தாளையடியில் பிடிக்கப்படும் மீன். சில நேரங்களில் நல்ல சுவையாக இருக்கும். சில வேளை சுவையாக இருக்காது.
அந்த மாதிரிக் கருத்து: இங்கே அந்த மாதிரி என்பது அந்த மாதிரியான அர்த்தத்தில் வந்துள்ளது. ஹி…ஹி..
மொக்கு: மக்கு.

இந்தக் கவிதை முற்று முழுதாக ஈழத்து மொழி வழக்கில் எழுதப்பட்ட ஓர் கவிதை!
புரட்சி வானொலிக்காக,
நிரூபன்

The post கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி! appeared first on Puradsi.

]]>
ரொக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லைட் ஏரியாவா மாறும் கோவில்களும் – கேவலமான உண்மைகள்!! https://puradsi.com/record-dance-avalam1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=record-dance-avalam1 Sun, 16 Jun 2019 02:47:30 +0000 https://desktop.puradsi.com/?p=59643

மேலைத் தேயத்தில் மூடிய திரைக்குள் இடம் பெறும் நிர்வாண நடனங்களை Strip டான்ஸ் என அழைப்பார்கள். மேலைத் தேசத்தவர்களைப் பொறுத்த வரை பொது வெளியில் வைத்து, ஓர் சமூகத்திற்கு முன்னால் இவ்வாறான நடனங்களை அரங்கேற்ற மாட்டார்கள். பொது வெளியில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக ஆடப்படும் நடன வகைக்கு பலே டான்ஸ் என பேர் வைத்துள்ளார்கள் அவர்கள். ஆனால் நம்ம ஊர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி இறை உணர்வை வேண்டிச் செல்லும் ஆலயங்களில் அங்கங்கள் […]

The post ரொக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லைட் ஏரியாவா மாறும் கோவில்களும் – கேவலமான உண்மைகள்!! appeared first on Puradsi.

]]>

மேலைத் தேயத்தில் மூடிய திரைக்குள் இடம் பெறும் நிர்வாண நடனங்களை Strip டான்ஸ் என அழைப்பார்கள். மேலைத் தேசத்தவர்களைப் பொறுத்த வரை பொது வெளியில் வைத்து, ஓர் சமூகத்திற்கு முன்னால் இவ்வாறான நடனங்களை அரங்கேற்ற மாட்டார்கள்.

பொது வெளியில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக ஆடப்படும் நடன வகைக்கு பலே டான்ஸ் என பேர் வைத்துள்ளார்கள் அவர்கள். ஆனால் நம்ம ஊர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி இறை உணர்வை வேண்டிச் செல்லும் ஆலயங்களில் அங்கங்கள் வெளித் தெரிய ஆடப்படும் முழு நீள(ல)க் கவர்ச்சி நடனத்திற்கு நம்மவர்கள் வைத்திருக்கும் பெயர் ரெக்கார்ட் டான்ஸ்.

சின்ன மேளம், ஒயிலாட்டம், மானாட்டம் இவை எல்லாவற்றையும் விட முற்று முழுதாக பெண்களை விபச்சாரப் பொருளாக்கி பப்ளிக் ப்ளேஸில் வயது வேறுபாடின்றி அனைவரும் பார்த்து தொலையுங்கள் எனும் நோக்கில் இடம் பெறுகின்றது இந்த மாதிரியான நடனங்கள்.

முன்பெல்லாம் ஊருக்கு ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் இருப்பது போல இப்பொழுதெல்லாம் ஊருக்கு ஊர் ஒவ்வோர் ஊரின் இளைஞர் அணியின் பெயரிலும் இந்த ரெக்கார்ட் டான்ஸ் குறூப் வேறு இருக்கிறது.

குறிப்பிட்ட வயதினர் மட்டும் பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒரு மூடிய அறைக்குள் அல்லது மூடிய திரைக்குள் இப்படி ஒரு நிகழ்வு இடம் பெற்றால் இதில் பிழை என்று சொல்வதற்கு யாருக்குமே உரிமை இல்லை என்று கூறலாம்.

ஆனால், வயது வந்தோருக்கான கூட்டத்தின் நிகழ்வு என்று கூட சொல்லாது, ஆலயங்களில் அனைத்து வயதினரும் பார்க்கும் வண்ணம் இவ்வாறான நடனம் நிகழ்வதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒவ்வோர் ஆலயத் திருவிழாக்களின் போதும், ஒவ்வோர் பிரதேச சமூக நிகழ்வுகளின் போதும் பொது வெளியில் இவ்வாறு நிர்வாண நடனம் ஆடப்படுவதை எப்படி எமது சமூக கலாச்சார காவலர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை?

அம்மாள் தொண்டர்கள், ஐயனார் ரசிகர்கள், மாரியாத்தா டான்ஸ் டீம், என பல்வேறு பெயர்களில் குறூப் வேறு. இன்னும் கொஞ்ச நாள் போனால் கருணாநிதி டீம், ஜெயா டீம் என ரெக்கோர்ட் டான்ஸிற்கு குறூப் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கே! நடனம் ஆடினால் கூட பரவாயில்லைங்க. அங்கே பார்வையாளர்களாக இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளான – சிறுவர்களின் மூஞ்சிகள் அப்படியே தெரியும் வண்ணம் அதை கூட வீடியோ பிடித்து யூடியூப்பில் அப்லோட் பண்ணி இண்டர்நேஷனல் லெவலுக்கு அனுப்புறாங்கப்பா! என்னங்க கலாச்சார காவலர்களே பொது வெளியில் பெண்களை ஆண்கள் விபச்சாரத்திற்கு உள்ளாக்கும் செயலை கண்டுக்க மாட்டீங்களா? பெண்ணியவாதிகளே நீங்கள் எல்லாம் எங்கே போயிட்டீங்க?

The post ரொக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லைட் ஏரியாவா மாறும் கோவில்களும் – கேவலமான உண்மைகள்!! appeared first on Puradsi.

]]>
இந்த மாதிரி ஆண்கள் மனைவியுடன் மிருகங்களை போல உடலுறவு கொள்பவர்களாம்! அப்போ நீங்கள் எந்த மாதிரி? https://puradsi.com/illara-pantham-advice/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=illara-pantham-advice Sat, 15 Jun 2019 04:03:47 +0000 https://desktop.puradsi.com/?p=59515

இல் வாழ்க்கை – இது வெறுமனே உடலுறவு சார்ந்த ஒன்று என்றால் கிடையவே கிடையாது. தம்பதிகள் பரஸ்பரம் தமக்குள் அன்பைப் பரிமாறிக் கொள்வதும், தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மனசு விட்டு ஒருத்தர் கூட இன்னொருத்தர் பேசுவதற்கும் இவ் இல் வாழ்க்கை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பதாகவே ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு, மனம் விட்டு பேசிக் கொள்வதால், தமக்குப் பிடித்த வகையில் தம் வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றார்கள், ஆனால் […]

The post இந்த மாதிரி ஆண்கள் மனைவியுடன் மிருகங்களை போல உடலுறவு கொள்பவர்களாம்! அப்போ நீங்கள் எந்த மாதிரி? appeared first on Puradsi.

]]>

இல் வாழ்க்கை – இது வெறுமனே உடலுறவு சார்ந்த ஒன்று என்றால் கிடையவே கிடையாது. தம்பதிகள் பரஸ்பரம் தமக்குள் அன்பைப் பரிமாறிக் கொள்வதும், தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மனசு விட்டு ஒருத்தர் கூட இன்னொருத்தர் பேசுவதற்கும் இவ் இல் வாழ்க்கை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பதாகவே ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு, மனம் விட்டு பேசிக் கொள்வதால், தமக்குப் பிடித்த வகையில் தம் வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றார்கள், ஆனால் பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்படும் திருமண பந்தத்தில் – அரேஞ்ச் மாரேஜ்ஜில் இணைந்து கொள்வோர் நிலை? பல வெளியே சொல்ல முடியாத வேதனைகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், திருமணத்தின் பின் காதல் செய்யலாம் எனும் வகையில் பல தம்பதிகள் தமது துணையுடன் அன்பாக இருந்தாலும், இந்த டிஜிட்டல் உலகிலும் இப்படியான மிருகங்களைப் போன்று “தமக்கெல்லாம் எப்போது உடலுறவு கொள்ள வேண்டுமோ” அந்த நேரத்திற்கு மட்டும் மனைவியை நாடும் கணவர்களும் உண்டு. இயந்திரமயமான வாழ்க்கை, பெற்றோர் முறைப்படி திருமணம், நகர்ப் புற வாழ்க்கைக்கு புறம்பாக, கிராமத்தில் மாமனார் மாமியாருடன் கூட்டுக் குடும்பம், கட்டாயப்படுத்தப்பட்ட சிறை வீட்டு வாழ்க்கை , வீட்டுக்கு வரும் விருந்தினர் முன் மரியாதைக் குறைவாக மனைவியை தரம் தாழ்த்தி பேசும் கணவரின் கொடூர செயல், தம் ஆசைகள் விருப்பங்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்கள், அன்பாய் காது கொடுத்து கேட்காத கணவன், என இன்றும் பல பெண்கள் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆம், என்ன தான் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்தாலும், நம் வாழ்க்கையிலும் “சமைச்சுக் கொண்டிருக்கிறப்ப பின்னாடி ஓடி வந்து கணவன் கட்டி அணைக்க வேண்டுமே” என்று ஏங்கும் பெண்களும், காலையில் ஒரு பெட் காப்பி போட்டு தந்தா நல்லா இருக்குமே என்று தவிக்கும் பெண்களும், கை கோர்த்துக் கொண்டு ஒரு சினிமா, ஜாலியா வருடத்தில் ஒரு தரம் ஒரு ஹனிமூன் சுற்றுலா, தம் மன உடல் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவதற்கேற்ற கணவன் இல்லையே என அன்பிற்காய் ஏங்கும் பெண்களும் நம் சமூகத்தில் இன்றும் வாழ்கிறார்கள். இது இவர்களின் தவறா என்றால் கிடையவே கிடையாது. அவர்கள் கணவரின் தவறு என்றே சொல்லலாம். காரணம்?

இரவில் வேலை முடிந்து வந்தாலும் நீ சாப்பிட்டியா என்று கூட கேட்காமல், சாப்பிட்டு விட்டு மொபைல் போனில் வாட்ஸ் அப் குறூப்களிலும், கேம் விளையாடுவதிலும் இப்போதும் 15 வயது குழந்தைகள் போல இல் வாழ்க்கை என்றால் என்னான்னே தெரியாது நேரத்தை செலவழிக்கும் கணவன்மாரும் உண்டு! மனைவியின் தேவைகளை புரிந்து கொள்ளாத கணவன், நாம என்ன தான் நவீன உலகம் என்று பேஸ்புக்கில வாற பெண்ணுரிமை பற்றிப் பேசும் பதிவிற்கு கமெண்ட் செய்து, லைக் செய்து நாம் வீர புருஷர்கள் என்று சொன்னாலும், நம் வீடுகளிலும் இப்படியான அசிங்கம் நிகழ்கிறதே என்பது உண்மை. ஆடவன் ஒருவன் எப்போது தன் மனைவியை தனக்குச் சமனாய் – சரி நிகராய் சம உரிமையுடன் பழகுகிறானோ நிச்சயமாக அவன் தான் பெண்ணைப் போற்றக் கூடியவன், தன் தாய்க்கு கொடுக்கும் அதே சமனான மரியாதையினை – மதிப்பினை தன் தாரத்திற்கும் வழங்க கூடியவன்.

ஆனால் பல ஆண்களிடம் அந்தப் பண்பு இருப்பதே இல்லை. இந்த டிஜிட்டல் உலகிலும் , மனைவி என்ன தான் படித்திருந்தாலும் திருமணத்தின் பின்னர் வேலைக்குச் செல்லக் கூடாது, வீட்டினுள் இருக்கனும், மனைவி காலையில் காப்பி கொடுப்பதற்கும், துணி துவைப்பதற்கும், வேளா வேளைக்கு சமைத்துக் கொடுப்பதற்கும், தனக்கும் தன் வம்சத்திற்கும் பேர் சொல்லும் குழந்தையினை ஈன்றெடுப்பதற்கும் , எப்போதெல்லாம் உணர்ச்சி வருகிறதோ அப்போது மட்டும் அவள் என்ன மாதிரியான மன நிலையில் இருந்தாலும் உடலுறவிற்கான எந்திரமாக இருக்க வேண்டும் என்று தான் பல ஆண்கள் ஆணாதிக்க கீழ்த்தரமான – மிகவும் கேவலமான சிந்தனையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல பெண்கள் இந்த மாதிரியான கொடூரங்களை வெளியே சொல்ல முடியாது இன்றும் மனச் சிறைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிஜம், காலையில் வேலை, வேலைக்கு போனா “என்னங்க நல்லா இருக்கீங்களா” என்று மெசேஜ் அனுப்பினால் கூட எரிந்து விழும் கணவன், அப்புறமாக, வீட்டிற்கு வந்ததும், குழந்தை இருந்தால் குழந்தையுடன் மட்டுமே அன்பாக பேசி விட்டு, குட்நைட் கூட சொல்லாமல் கட்டி அணைத்து முத்தம் கூட வழங்காமல் தூங்கச் செல்லும் கணவன் – இப்படித்தான் இன்றும் ஆணாதிக்க வட்டாரத்தினுள் அகப்பட்ட பல பெண்களின் வாழ்க்கை!!

மனைவி என்பவள் யார் – தாய்க்கு நிகராய் நம்மில் பாதியாய் என்று சினிமா வசனம் பேசினாலும், அது அரேஞ் மாரேஜ் ஆக கூட இருந்தாலும், அவ்வபோது இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றவளாய் நம்முடன் கூட இருக்கிறாளே என்று யாரும் நினைப்பதில்லை. அப்படி நீங்கள் நினைத்து உங்கள் வாழ்வில் சரி பாதி “நீ பாதி நான் பாதி கண்ணே” எனும் அந்தஸ்து கொடுப்பவராக இருந்தால் நீங்கள் தான் Such a great person” என்று சொல்லுகிறது வாழ்வியல்.

ஆக நமக்கெல்லாம் எப்போது உணர்வு வருகிறதோ, அப்போது வந்து நீ கட்டிலில் அமர்ந்து கொள், என் கழிவு அனைத்தையும் கொட்டி விட்டு, உனக்கு ஒற்றை முத்தம் கூட வைக்காது, உறவில் உனக்குத் திருப்தியா என்று கூட கேட்காது, ஏன் எந்த வித இதர தீண்டல்களையும் செய்யாது ஒரு ஆண் தன் உறவை முடிப்பவன் ஆயின் அவன் ஹிட்லர் போன்ற கொடூரனுக்குச் சமம் என்று கூறுகிறது கிரேக்கிய இலக்கியம்.

அவ்வப் போது செல்லச் சீண்டல், சின்னதாய் கோபம், அவளின் தேவைகள் என்ன? அவனின் தேவைகள் என்ன? நண்பர்களாய் அன்போது பேசி, செல்லமாய் கூப்பிட்டு சின்னதாய் சிரித்து, வாழ்வில் வரவு முதல் செலவு வரை, நன்மை முதல் தீமை வரை என்று ஒரு பெண்ணுடன் ஆண் பழகுவானாயின் அவனே இவ் உலகில் உயர்ந்தவன். ஏனையோர் எல்லாம் காட்டுமிராண்டிகளாம். தம் தேவைக்காக மிருங்களைப் போன்று புணர்தலை மட்டும் குறிக்கோளாக கொண்டு பெண்ணை அடிமையாக – வீட்டு வேலைக்காரியாக நடத்தும் மிகக் கேவலமான மிருகங்கள் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போ சொல்லுங்கள் நீங்கள் இந்த விடயத்தில் எந்த ரகம்?

வெறும் செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கை இல்லை, வாழ்வின் சரி பாதியாய் தன் துணை மீது அன்பு செலுத்துவதும், மனம் விட்டு பேசுவதும், ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாய் இருப்பதும் தான் வாழ்க்கை என நீங்கள் நினைத்தால் இந்த நல்ல கருத்துக்களைத் தாங்கிய பதிவினை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், இதுவரை காலமும் மிருகம் போன்று நீங்கள் நடந்து கொண்டால், இப்போதாச்சும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களைத் திருத்திக்க இந்தப் பதிவு உதவுமாயின் நமக்கும் சந்தோசமே!!

புரட்சி வானொலிக்காக நிரூபன்.

The post இந்த மாதிரி ஆண்கள் மனைவியுடன் மிருகங்களை போல உடலுறவு கொள்பவர்களாம்! அப்போ நீங்கள் எந்த மாதிரி? appeared first on Puradsi.

]]>
கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் –கயல்விழி https://puradsi.com/kayalvizhi-poem/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kayalvizhi-poem Fri, 14 Jun 2019 12:07:13 +0000 https://desktop.puradsi.com/?p=59454

அமாவாசை அருகில் வருதுடி கொஞ்சம் எட்டிப்போ வகுப்பறை கிண்டல்கள் . பைத்தியகாரி வேடம்தறி பக்காவாய் பொருந்தும் உனக்கு பள்ளி கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் . கரிச்சட்டி சனியன் எனக்கின்னு பொறந்திருக்கு கண்ணில் படும் போதெல்லாம் தந்தையின் அரிச்சனை . காசு பணம் இருந்தாலே கட்டிக்கொடுக்க முடியாது கறுப்பா வேற நீ இருக்க கல்யாணம் வெறும் கனவு தான் பெத்தவளின் கண்ணீர். தொட்டுடாத என் புள்ளைய ஒட்டிக்கிரும் உன் கறுப்பு பட்டணத்துல வாழப்போன பக்கத்து வீட்டு அக்கா . நெருசல் […]

The post கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் –கயல்விழி appeared first on Puradsi.

]]>

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே…இவ பெரிய கிளியோபட்ரா ..
உயிர் குடிக்கும் கேலிகள் .

அடடடா …
சோகம் ஏன் உங்களிடம்
சோர்வே இல்லை என் மனதிடம் .

கறுப்பான கல் கடவுள்
சிலையாகும் என்றால்
கரு இமைகள் தான்
கண்ணை பாதுகாக்கின்றது
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில்
கவலை ஏன் எனக்கு .!

வெண்ணிலவை அழகாக்க
இருள் வேண்டும் என்றால்
கார்மேகம் வந்தால் தான்
மழை பொழியும் என்றால்
கறுப்பாய் பிறந்ததால் ஏன் நான்
கவலை கொள்ளவேண்டும் .

வெண்கூந்தல் அழகென்றும்
வெண்விழி அழகென்றும்
வர்ணிக்காத போது
ஏன் வெக்கப்பட வேண்டும் நான்
கறுப்பாய் பிறந்ததற்கு .

கறுப்பன் ஆட்சி புரியும் போது
கறுப்பி அழகியாகும் போது
கறுப்பால் மழை பொழியும் போது
கறுப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கறுப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ….!!!

The post கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் –கயல்விழி appeared first on Puradsi.

]]>
காட்சிப் பிழைகள் — கயல்விழி https://puradsi.com/kayalvizhiii/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kayalvizhiii Fri, 14 Jun 2019 11:57:17 +0000 https://desktop.puradsi.com/?p=59451

மனமுடைந்து மார்க்கம் இன்றி மரணவழி செல்கையிலே வரமாய் வந்து வாழ்வு தந்த வானத்து தேவதையே…! நடு வழியில் தவிக்க விட்டு நீ மறைந்த காரணத்தை சொல்லாயோ. என் அன்பில் ஏதும் குறையுண்டோ -இல்லை அகத்தினில் குறை கண்டாயோ சொல்லிவிட்டு செல்லடி நீ திருத்திடுவேன் என் தவறை. தூண்டிலில் ஒரு புழுவானேன் சுடுமணலில் மீனானேன். ஸ்வரம் இழந்த வீணையாய் சுதிசேரா ராகமாய் துணையிழந்து நானானேன். ஒளிதந்த சுடர்விழியே நீ இன்றி சோக இருளில் மூழ்கலானேன். வெண்மதியே என் ரதியே […]

The post காட்சிப் பிழைகள் — கயல்விழி appeared first on Puradsi.

]]>

மனமுடைந்து மார்க்கம் இன்றி மரணவழி செல்கையிலே
வரமாய் வந்து வாழ்வு தந்த வானத்து தேவதையே…!

நடு வழியில் தவிக்க விட்டு
நீ மறைந்த காரணத்தை சொல்லாயோ.

என் அன்பில் ஏதும் குறையுண்டோ -இல்லை அகத்தினில் குறை கண்டாயோ
சொல்லிவிட்டு செல்லடி நீ
திருத்திடுவேன் என் தவறை.

தூண்டிலில் ஒரு புழுவானேன்
சுடுமணலில்
மீனானேன்.

ஸ்வரம் இழந்த வீணையாய்
சுதிசேரா ராகமாய்
துணையிழந்து நானானேன்.

ஒளிதந்த சுடர்விழியே
நீ இன்றி
சோக இருளில் மூழ்கலானேன்.

வெண்மதியே என் ரதியே
என்னை பிரிந்தது நியாயமா.?
கடல் அலையை விட்டுக் கரை பிரிந்தால்
உயிர்கள் மண்ணில் வாழுமா .?

அன்பென்றால் அம்மா
என்றார் -அன்பே எனக்கு நீ என்றேன்
அழகே என்னிடம் வந்துவிடு -உன் அணைப்பில் ஆறுதல்
தந்துவிடு.

எப்போதோ மரித்திருப்பேனே
கண்ணே நீ இல்லையென்றால்,
இப்போதும் மரித்துக்கொண்டிருக்கின்றேன் பெண்ணே
நீ இல்லையென்று.

ஜன்னலோர நிலவடி நீயெனக்கு
அன்று
பெளர்ணமியாய் வந்தாய்…
இன்று ஏனடி
அமாவாசையானாய்.?

தூக்கணாங்குருவியென
நீயும்
கூடென நானும்
ஒன்றாய் வாழ்ந்திருந்தோம்…

நீ பறந்துவிட நான்
தொங்கிக்கொண்டிருக்கின்றேன்
உயிர் இழந்த வெறும் கூடாய்.

அழையா விருந்தாளியாய் உன் நினைவும்
அடுக்களைக்குள் பூனையாய் என் காதலும் அடம்பிடிக்கிறது
வெளியேற மனமின்றி.

ஆண் மனதின் நேசம் தான்
வான் அளவை மிஞ்சி விடும்
அருகில் நீ இருந்திருந்தால் உனக்கும் அது புரிந்திருக்கும்.

பாலைவன தடங்களாய் காத்திருக்கின்றேன்
பனித்துளியே நீ வருவாய் என்று…

கானல் நீராகியே போகிறது நம் காதலை போல என் காத்திருப்பும்.

என் இதயச்செடியில்
காதல் மலரானவளே முள்ளின் மேல் காம்பாய் எனை தவிக்கவிட்டு முகம் மறைக்கும் காரணம் சொல்லடியே

முத்தமிழே-என் முத்தழகே
வாய் திறந்து பேசிவிடு
மெளனம் உன் மொழி என்றால்
மரணமே என் வழியாகும்.

The post காட்சிப் பிழைகள் — கயல்விழி appeared first on Puradsi.

]]>
” மருமகள்” (இலங்கை தமிழில்) kayalvizhi https://puradsi.com/marumagal-kayalvizhi/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=marumagal-kayalvizhi Fri, 14 Jun 2019 11:43:54 +0000 https://desktop.puradsi.com/?p=59448

மருமகள் “சுதன்… சுதன்… எழும்புடா… தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார். “என் செல்லம்ல… இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா… இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி…” அரைகுறை நித்திரையில் சுதன் உளற “அம்மா… அண்ணா உன்னை செல்லக்குட்டி… கன்னுக்குட்டியாம்… நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள். “என்னடி சொல்ற….” – என்றவாறு வந்த அம்மா “டேய் சுதன்…இன்னுமா அந்த […]

The post ” மருமகள்” (இலங்கை தமிழில்) kayalvizhi appeared first on Puradsi.

]]>

மருமகள்
“சுதன்… சுதன்… எழும்புடா… தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

“என் செல்லம்ல… இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா… இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி…” அரைகுறை நித்திரையில் சுதன் உளற

“அம்மா… அண்ணா உன்னை செல்லக்குட்டி… கன்னுக்குட்டியாம்… நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள்.

“என்னடி சொல்ற….” – என்றவாறு வந்த அம்மா

“டேய் சுதன்…இன்னுமா அந்த சிறுக்கிட நினைப்பில இருக்க… அதான் எல்லாம் நேற்றையோட முடிஞ்சிட்டெல்லே … அப்புறம் எனன…?” அதட்டியவாறு எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த சுதன் சுயநினைவு வந்தவனாய் பேந்த பேந்த முழித்தான்

“தேவையில்லாம கனவு கண்டிட்டு இருக்காம அந்த மூதேவின்ர நினைப்பயெல்லாம் துாக்கி குப்பைல போட்டுட்டு ஆகவேண்டியதை பாருடா” – அம்மா.

அப்போதுதான் தான் அம்மா வீட்டில் நிற்பதை உணர்ந்தான்.

நேற்று…

அலுவலகத்தில் அவசர அவசரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சுதனின் தொலைபேசி சிணுங்கியது. எடுத்து காதில் வைத்தவாறு

“சொல்லுங்கம்மா…” – சுதன்

“நான் உன்ர வீட்ல தான் நிற்கிறன். இன்டைக்கு உனக்கு அரை நேரம் தானே. சீக்கிரம் வீட்டுக்கு வா… சம்மந்தியாட்களையும் வரச்சொல்லியிருக்கன்…” – அம்மா

“ஏன்… என்னாச்சு… ஏதும் பிரச்சனையாம்மா…?” – சுதன்

“எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டு இருக்கேலாது. சீக்கிரம் வீட்டுக்கு வா சொல்றன் …” – அம்மா.

அவசர அவசரமாக வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வேலையில் அவனது மன ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியாது தினறினான். வீடு வந்து சேர்ந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மாமாவும் மாமியும் பேயறைந்தது போல ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். மாமியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. அம்மா சர்வசாதாரணமாக அமர்ந்திருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அறையின் உள்ளிருந்து மனைவி ஹாசினியின் விக்கல் சத்தம் கேட்டது. நடக்க கூடாதது ஏதோ நடந்திருக்கு என்பதை ஊகித்துக்கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் மாமாவும் மாமியும் எழுந்துகொண்டார்கள்.

“மாப்பிள்ளை….” – மாமா

“என்னம்மா ஆச்சு… ஏதாவது பிரச்சனையா…? – சுதன தாயை கேட்டான்.

“வாடா… வீட்டுக்கு வாறத்துக்கு இவ்வளவு நேரமா… சரி சரி வா… நம்ம வீட்டுக்கு போகலாம்…” – அம்மா

“என்னம்மா சொல்ற…?”

“நீயும் பெண்டாட்டியும் காதலிக்கும் போதே தலையால அடிச்சுக்கிட்டேன் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று… கேட்டியா….? நீ தான் பிடிவாதமா நின்றாய். அப்பவே சொன்னனான் சீதனம் தந்தா தான் சம்மதிப்பேனனு. இவங்களும் சரின்னு தானே சொன்னான்க…..ஒரு வருஷமாச்சு… இன்னமும் தருவாங்க போல தெரியல…. அதான்… உன்னை கையோட கூட்டிட்டு போக வந்தன். அவங்க சீதன காசை தந்த பிறகு வரலாம். அதுவும் ஒரு வாரத்துக்குள்ள…”

“அப்பிடி என்ன அவசரம் அம்மா இப்ப காசுக்கு…?” – சுதன்

“தம்பி நீயாடா பேசுற… உன்னையும் மயக்கிப்புட்டாளுக போல… தெரியும் தானே உனக்கு உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறது. அடுத்த மாசம் கல்யாணத்தை வைக்க விரும்புறாங்க. அதுக்கு ஒரு கிழமைக்குள்ள அவங்க கேட்ட சீதன காசில பாதியாச்சும் கொடுக்கனும். அப்புறம் தான் திகதி முடிவு பண்ணணும்… எவ்வளவு வேலை இருக்கு… பெண்டாட்டி பின்னால சுத்திட்டு இருக்குற உனக்கு எங்க இதெல்லாம் தெரியப் போகுது… பேசிட்டு இருக்க நேரமில்லை. வெளிக்கிடு… வெளிக்கிடு…”

“மாப்பிள்ளை… நாங்க தரமாட்டம் என்று சொல்லல. இப்ப கொஞ்சம் இறுக்கமா இருக்கு… எப்பிடியும் தந்திடுறம் மாப்பிள்ளை… வாயும் வயிறுமா இருக்குற எங்க பொண்ணை விட்டுட்டு….” – ஹாசினியின் அப்பா

“அம்மா… ஒரு வாரகால அவகாசம் இருக்கு தானே. பார்த்துக்கலாம்மா…”

“ஒரு வருஷத்தில தந்திறாதவங்க தான் ஒரு வாரத்தில தந்திடப் போறாங்க… இவங்களைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். சரியான ஏமாத்துக்கார குடும்பம்டா… நாம நல்லாவே ஏமாந்திட்டம்…” – அம்மா

“அம்மா .. தயவுசெய்ஞ்சு….” சுதன் முடிப்பதற்கு முன்

“டேய்… நான் உன் அம்மாடா. எனக்கு நீ விளங்கப்படுத்தப் போறியா… இங்க பாரு… உங்கப்பா போயி சேர்ந்த பிறகு உங்க இரண்டு பேரையும் வளர்க்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். உன்னை கூட்டிகிட்டு தான் போவன். இப்ப நீ வரல்லன்னா… நேரா போயி குடும்பத்தோட மருந்து குடிச்சோ அல்லது கிணத்தில விழுந்தோ சாக வேண்டியது தான்… சொல்லிட்டன்… வாக்கு கொடுத்துட்டன். காப்பாற்றியாகனும்…” – அம்மா

அப்பிடியே தலைல கையை வைச்சுக்கொண்டு அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தான்.

“இப்பிடிலாம் பேசாதீங்க சம்மந்தி…” – ஹாசினியின் அம்மா சொல்ல

“தயவுசெய்து நீங்க வாய் திறக்காதீங்க. வாயில இருந்து வர்ற எல்லாம் பொய், பித்தலாட்டம்… இனியும் உங்களை நம்ப தயாராக இல்லை” – சுதனின் தாய் கூறினார்.

கொஞ்ச நேரத்தில் சுதன் எழுந்து ஹாசினி இருந்த அறையினுள் சென்றான். சற்றுநேரமாகியும் வராததை பார்த்து…

“சுதன்… இங்க நான் ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கன். நீ அங்க என்ன பெண்டாட்டியை கொஞ்சிட்டு இருக்கியா…? இப்ப நீ வாறியா… இல்ல நான் போகட்டா…?” – அம்மா

“கொஞ்சம் பொறுங்கம்மா…” – சுதன்

சற்று நேரத்தில் சுதன் தனது உடமைகளுடன் வெளியே வரவும் அவனது தாயின் முகத்தில் அப்பிடி ஒரு மகிழ்ச்சி.

“மாப்பிள்ளை… ” – மாமனார் துடித்துக் கொண்டு ஓடி வரவும்

“அப்பா… அவர் போகட்டும் விடுங்க…” அறையினுள் இருந்து கொண்டு ஹாசினி கூறவும்

“நீ சும்மா இரும்மா. உனக்கொனறும் தெரியாது… மாப்பிள்ளை சொன்னா கேளுங்க…” – மாமனார் துடித்தார்

“அப்பா… சொன்னா கேளுங்க… அவரை தடுக்க வேண்டாம்…” ஹாசினியின் குரலில் அழுத்தமான உறுதி தெரிந்தது.

“அம்மா நீ சும்மா இரும்மா… தப்பா நினைக்காதீங்க… அவள் ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு….”

“பாருங்க… என்ன திமிறாக பேசுறாளுன்னு. புருஷன்காரன் போகிறானே என்று கொஞ்சமாச்சும் கவலை இருக்கா என்று… இது தான் உங்க பிள்ளை வளர்ப்பா…? நல்லது. நீ வாடா…”

தாயுடன் நடக்கலானான் சுதன்.

“என்னடா இன்னமுமா படுக்கையை விட்டு எழும்பல… சீக்கிரமா எழும்பி குளிச்சிட்டு வந்து சாப்பிடு. சம்மந்தி வீட்டுக்கும் ஒரு எட்டு போயிட்டு வரனும். கனக்க வேலை இருக்கு… சும்மா படுத்திருக்காத….”

“அண்ணாக்கு இன்னமும் அண்ணியோட நினைப்பு போல… இல்லையா அண்ணா… அண்ணி பாவம்மா….” பிரியா கூறினாள்

“அண்ணியாவது கொண்ணியாவது. இனிமேல் அவங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது. இனி யாரும் அந்த குடும்பத்தைப் பற்றி இங்க கதைக்க கூடாது. நீ ஒன்றுக்கும் யோசிக்காதைடா சுதன். உனக்கு நல்ல இடமா வேற இடத்தில கட்டி வைக்கிறன்…” – தாய் கூறினார்

“வேணாம்மா… அண்ணி பாவம். அவங்க ரொம்ப நல்லவங்க…”

“எனக்கு யாரும் புத்திமதி சொல்லத் தேவையில்லை. அவரவர் வேலையை அவரவர் பார்த்தா போதும்” –

நாட்கள் உருண்டோடின. பிரியாவின் திருமணம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்தேறியது. இரண்டு நாட்களின் பின்னர்…

“சுதன்… நான் உன்கிட்ட ஒரு விசயத்தை மறைச்சிட்டன்டா…””” – அம்மா

“என்னம்மா…?””” ”

“இன்னமும் இரண்டு வாரத்தில சம்மந்தியாட்கள் இங்க குடி வரப்போறாங்க… நாம வேற வீடு பார்த்து போக வேணும்…””” ”
“ம்… தெரியும்மா… வர்ற ஞாயிற்றுக்கிழமையே நாம நம்ம வீட்டுக்கு பேயிடலாம்.”

“உனக்கு தெரியுமா…? எனக்கு சொல்லவேயில்லை… எங்க…. உன் பெண்டாட்டி வீட்டுக்கு போக சொல்றியா….? அதான் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்றிட்டு வந்தாச்சே… இன்னமுமா அவளை நினைச்சிட்டு இருக்க…”

“அம்மா… என்னை என்ன கையாலாகாதவன் என்று நினைச்சியா… சீதனம் தரல்ல என்றதுக்காக என்னை நம்பி வந்தவளை விட்டுட்டு வர்றதுக்கு… நீங்க தனியாக கஷ்டப்படுவீங்க எனடதால ஹாசினியே தான் என்னை போய் நின்று எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு உங்களை கூட்டிட்டு வரச்சொன்னவள்…. உங்ககிட்ட முன்னாடியே சொன்னா சம்மதிக்க மாட்டீங்க என்று தெரியும். சும்மாவே உங்களுக்கு அவளை பிடிக்காது. அதான் எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்லுவம் என்றிருந்தேன்… ஆனா அவளுக்கு உங்கமேல அளவுகடந்த மரியாதை வைச்சிருக்கிறாள…”

“………” அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா.

“…. அடிக்கடி கேட்டுட்டு இருந்தீங்களே சீதன காசு எப்படி ஒழுங்கு செய்தனி என்று… அதுவும் அவள் கொடுத்தது தான். நம்ம சொந்த பந்தங்களிட்ட கேட்டன். எல்லோருமே கையை விரிச்சிட்டாங்க. கடைசில அவள் தான் நாம இப்ப இருக்கிற வீட்டு பத்திரத்தை தந்தாள். அதை வைச்சுத்தான் எல்லாத்தையும் முடிச்சன். கொஞ்ச கொஞ்சமா பணத்தைக் கட்டி பத்திரத்தை மீட்டுக்கலாம்.”

“………” இப்பவும் அதே அமைதியேர்டு கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா.

“என்னம்மா அமைதியாவே இருக்குறாய்…?”

“இல்லைடா… இவ்வளவு செய்திருக்கிறாள்… அவளை வாய்க்கு வந்தபடி பேசிட்டன். இப்ப எந்த முகத்தோட போய் முழிக்கிறது சொல்லு பார்ப்பம்…”

“அவள் ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டாள். நீங்க வாங்க…”
கதைத்துக்கொண்டிருக்கும் போதே சுதனின் தொலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தவன்…

“அம்மா… ஹாசினி தான்… ஒரு நிமிஷம்…”

காதில வைத்தவன் அப்பிடியே தாயிடம் நீட்டினான்.

“உங்ககிட்ட தான் கதைக்கணுமாம்…”

“என்கிட்டயா… எதுக்கு…” என்றவாறு தொலைபேசியை வாங்கி காதில் வைத்தார்.

“மாமி… ஹாசினி கதைக்கிறன். எப்பிடி இருக்கீங்க…? நீஙக எதையும் யோசிக்க வேண்டாம் மாமி. நானே நேர்ல வந்து உங்களை கூட்டிட்டு வந்திடுவன். என்னால கன துாரம் பிரயாணம் செய்ய முடியாது மாமி… நீங்க நாளைக்கே இவர் கூட இங்க வந்திடுங்க. எல்லாத்தையும் ஆறுதலாக பார்த்துக்கலாம்.”

“இல்லைம்மா… நான் உங்க வீட்டுக்கு வந்து ஏதேதோ பேசியிருக்கேன்…. இப்ப எந்த முகத்தோட….”

“மாமி… நீங்க எங்க வீட்டுக்கு வரவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. சரியா… என்ர மனசில எதுவும் இல்லை. நீங்களும் எதைப்பற்றியும் யோசிக்காம வீட்டுக்கு வாங்க…” – ஹாசினி

The post ” மருமகள்” (இலங்கை தமிழில்) kayalvizhi appeared first on Puradsi.

]]>
ஊடகம் என்றால் என்ன ..?? கயல்விழி https://puradsi.com/kayalvizhi-pakkam/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=kayalvizhi-pakkam Fri, 14 Jun 2019 11:34:14 +0000 https://desktop.puradsi.com/?p=59443

வணக்கம் ஊடகம் .. இந்த ஊடகம் என்றால் என்ன ? இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன? பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன? இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள். இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .? ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல பொறுப்பான துறையும் தான் . தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை […]

The post ஊடகம் என்றால் என்ன ..?? கயல்விழி appeared first on Puradsi.

]]>

வணக்கம் ஊடகம் ..
இந்த ஊடகம் என்றால் என்ன ? இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன? பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன? இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள். இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .?

ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல
பொறுப்பான துறையும் தான் . தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை
சிரிக்கவோ சிந்திக்கவோ வைத்த படி தான் நகர்கிறது . நீங்கள் தான் சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து
சிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .

ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஒரு விடயத்தை கையில் எடுக்கும் போது
இது நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும்
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றே உழைக்கிறான்
அதை மக்கள் கண்டுகொள்ளாதபோது அல்லது மீண்டும் அதே தவறு நடைபெறும் போது அந்த இடத்தில் நடைபிணம் ஆகிறான் .

ஒரு சில அரசியல் அடிமை ஊடகங்கள் தவிர்த்து மற்றைய அனைத்து ஊடகங்களும் மக்களிடம் நெருங்கவும் நேர்மையாய் செயற்படவுமே முயற்சிக்கின்றன .
அவ்வாறான ஊடகங்களுக்கு ஏதோ ஒரு வகையில் மிரட்டல் அல்லது இடைஞ்சல் வருகிறது அதையும் எதிர்த்து
உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றால் மக்கள் கண்டுகொள்வதில்லை காரணம் இது தான் .
பத்திரிக்கை யெனில் எம் மக்கள் புகழ் பெற்ற பத்திரிகையை தான் முழுவதும் படிப்பார்கள் சாதாரண பத்திரிகையில் தலைப்பு மட்டும் தான் .
தொடர்ச்சி மறு பக்கத்தில் என்று இருந்தால் அந்த பக்கத்தை திருப்பவே மாட்டார்கள் .இதே செய்தி தான் அந்த பிரபலம் பத்திரிகையிலும் இருந்ததே என்பார்கள்
அதையும் மீறி படிப்பவர்கள் ஐயோ இந்த பத்திரிகைக் காரன் பொய் தான் எழுதுறான் என்பார்கள் .
உண்மையின் நிலை இது தான்

அடுத்து வானொலி .
செய்திகளுக்காக மட்டும் அதிக வானொலிகள் இல்லை
மூன்று வேளை செய்திகள் மற்றும் மணித்தியால விஷேச செய்திகள் என இருக்கும் .
இதில் விஷேச செய்தி என்றதும் காது கொடுப்போர் விரிவான செய்திகளை
எப்போதுமே கேட்க மாட்டார்கள்.
ஏதும்
அரசியல் வால் பிடிக்கும் பிரபல வானொலி செய்தி எனில் கேட்க வாய்ப்பு உள்ளது .

அடுத்து தொலைக்காட்சி

செய்திக்கான நேரத்தில் சீரியல் போகும்
யார் பார்ப்பார் செய்தி ?
அரைகுறையாக பார்த்து விட்டு அலரிகொண்டு இருப்பார்கள் .

நீங்களே சொல்லுங்கள் உண்மையா பொய்யா ?

கற்பழிப்பு பற்றிய செய்தி ஒன்று சில மாதங்களுக்குமுன்
இந்தியா சின்ன பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது அதில் கெடுக்கப் பட்ட பெண்ணின் மார்ப்பு மற்றும் பெண்ணுறுப்புப் பகுதி அம்புக்
குறியால் சுட்டிக் காட்டப் பட்டு இருந்தது

அதை பார்த்ததும் எனக்கே சற்று கோவம் அந்த பத்திரிகை மேல் .
உடனே
சில மாதர் சங்கங்கள் போர் கொடி தூங்கினார்கள்
எங்கள் போராளிகள் சிலரும் பொங்கினார்கள் .
பார்க்கவே அசிங்கமா இருக்கு இப்படி எல்லாருக்கும் அவள் உடலுறுப்பை காட்டுறானுகள் என்று.

படித்தவுடன் எனக்கு வந்த கோவம் சற்று சிந்தித்ததும் தனிந்தது .

மரணித்தவளின் மார்ப்பை காட்டியதும் போராடிய மகளீர் மரணித்துக் கொண்டிருக்கும் எவருக்காகவும் போராடுவது இல்லை . அசிங்கமான பத்திரிகை விபச்சார பத்திரிகை என பொங்கிய போராளி எவரும்
பெண்ணை கெடுத்தவனை தட்டிக் கேட்கவோ தண்டனை பெற்றுக் கொடுக்கவோ முயற்சிக்காமல் இருப்பது அசிங்கம் இல்லையா?

எப்போது
மீடியாக்கள் வியாபாரம் தான் பார்கிறார்கள் என்ற எண்ணம் தான் மக்கள் மனதில் ஆனால் ஒவ்வொரு ஊடகவியளாரரும் உயிரை கொடுத்து போராடுகிறார்கள் உண்மைகளை உங்களிடம் சேர்க்க ஆனால்
நிஜங்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை
நிழல்களின் பின்னால் சென்றுகொண்டு நிஜத்தை நிழலாக்குகின்றீர்கள்
இது தான் உண்மை.

உங்கள் மேல் தவறை வைத்துக்கொண்டு ஏன் அடுத்தவரை குற்றம் சொல்கிறீர்கள்
கூத்தாடிகளின் செய்திக்கு தான் (நடிக நடிகைகளின்) முன்னுரிமை கொடுக்கிறது ஊடகம் என்கிறீர்கள் அப்படி ஒரு விடயம்
ஊடகங்களில் இடம் பெறா விட்டால் உங்களுக்கு அப்படி ஒரு
ஊடகம் இருப்பதே நினைவில் இருக்காது .

இன்றைய நாட்களில் இன்னொரு பக்கம் செய்தி வலைதளங்கள் தலைப்புகளை கண்டதுமே படிக்க ஓடுகிறார்கள் உள்ளே எதுவும் இருப்பது கிடையாது இதையே பத்திரிகை படிப்பதிலும் காட்டலாமே .!

புதிதாக ஒரு செய்தி தளத்தில் இருந்து பகிரப் பட்டு இருந்தது தலைப்பு இது தான்
“நாற்பது வெட்டிய தலைகளுடன் கொழும்பை நோக்கிச் செல்ல தயாராக இருந்த லொரி ஒன்றை வவுனியா பொலிஸார் மீட்டனர் லொரி ரைவரும் கைது ”
ஒரு நிமிடம் செய்தியை பார்த்ததும் திகைத்து விட்டேன் .
விரிவான செய்திகளை பார்த்த போது நாற்பது மாட்டுத் தலைகள் .
மாடும் உயிர் தான் இல்லை என்று சொல்லவில்லை அதை விபரமாக எழுதலாமே?
அதற்கான விருப்புகள் சுமார் மூவாயிரத்திற்கு மேல் இருந்தது.

இப்படியான செய்திகளை விரும்பிப் படிக்கும் எவரும்
விழிப்புணர்வு செய்திகளை படிப்பதில்லை ஏன் கேட்பதும் இல்லை.

இலங்கையில் தினமும் ஆகக்குறைந்தது 10 தொடக்கம் இருபது வரை சடலங்கள் மீட்கப் படுகின்றது ,கிணற்றில்,குளத்தில் காட்டில்,ரோட்டில் என்று
இதில் அதிகமானோர் பெண்கள்.

அனைத்து ஊடகங்களில் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்கள்
பாதுகாப்பாக இருங்கள் நடப்பதற்கான காரணத்தையும் சொல்கிறார்கள் யார் கேட்டீர்கள் சொல்லுங்கள் .?
கொலைகள் கொள்ளைகள் கூடிக்கொண்டே இருக்கிறதே தவிற குறையவே இல்லை .

உங்கள் மேல் இருக்கும் தவறை ஊடகங்கள் மேல் ஏன் திணிக்கிறீர்கள் .?

தனியார் வகுப்புகள்
பேரூந்துகள் (தரிப்பிடங்கள் )
கடற்கரைகள்
உணவகங்கள் இப்படி எங்கு பார்த்தாலும்
பதினைந்து வயது முழுமை பெறாத
சின்ன தங்கைகள் இருபத்தைந்து வயதையும் கடந்த ஆடவனுடன்
கரங்களை கோர்த்த படியோ கன்னத்தை உரசியபடியோ ஏன் கட்டிப் பிடித்த படியும் இருக்கிறார்கள்
இதன் விளைவுகள் விபரீதத்தில் முடிகிறது
கண் கூடாக பார்த்தும் இருக்கிறோம்
இதை பற்றி விடிய விடிய சொல்லுங்கள் எவரும் கண்டுகொள்ளப் போவதில்லை
இதே
நீங்கள் சொல்லும் நடிக நடிகைகள் எனில்
தேடித் தேடிப் பார்ப்பீர்கள் .

நீங்களே சொல்லுங்கள் கொலை செய்யப் பட்ட அல்லது கற்பழிக்கப் பட்ட
செய்திகளை பார்ப்பீர்களா.?
அல்லது
சுச்சித்ரா லீக்ஸ் பார்ப்பீர்களா .?

ஒரு தேவையான செய்தியை உங்களிடம் சேர்க்க உண்மையான ஊடகவியலாளர் படும் பாடு அறிந்திருக்கின்றீர்களா?

இருந்த இடத்தில் எதுவும் கிடைப்பதில்லை
உயிரை கையில் பிடித்தபடி
வெயிலில் மழையில் அடி உதை
இவைகளையும் மீறி செய்திகளை
உண்மை என்று உறுதி படுத்தி
பின்
அதை ஊடகம் ஒன்றிடம் ஒப்படைக்கிறான்
அது உண்மையான ஊடகமாக இருக்கும் பட்சத்தில் அந்த செய்தியை வெளியிடும்
முன் படும் பாடுகள் உங்களுக்கு புரியாது
உண்மையை உங்களுக்குகாக உயிரோடு போரடி தெளிவு படுத்தும் போது
நீங்கள்
உணராமல் கடந்து செல்வீர்கள் பாருங்கள்
அடி உதை திட்டல் வெயில் மழை இவை எதிலும் கிடைக்காத வலியினை ஒவ்வொரு ஊடகவியலாளனும் உணர்வான் .

இதில் இன்னொரு ரகம் உண்டு அதாவது நீங்கள் விரும்பும் பிரபல அரசியல் வால் பிடிக்கும் ஊடகங்கள்
மேல் குறிப்பிட்ட அனைத்தையும் தாங்கி ஊடகவியலாளன் செய்தியினை சேகரித்து ஒப்படைத்த பின் அதை வெட்டி கொத்தி
இவர்கள் வால் பிடிக்கும் அரசியல் வாதி அல்லது கட்சியை முன் நிறுத்தி அந்த செய்தியையே மாற்றி அமைத்திருப்பார்கள்
அதை
தான் நீங்கள் நம்புவீர்கள் .
பின்
ஒட்டு மொத்த ஊடக துறையையும் கேவலப் படுத்துவீர்கள் .

முதலில்
உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் .
ஒட்டு மொத்த ஊடகங்களும் சரியான பாதையில் தான் பயணிக்கிறது என்று நான் சொல்லவில்லை
சரியான பாதையில் பயணிக்கும் ஊடகங்களை தேர்வு செய்ய சொல்கிறேன் .

The post ஊடகம் என்றால் என்ன ..?? கயல்விழி appeared first on Puradsi.

]]>