" "" "

மருத்துவமனைகள் கல்லூரிகள் ஆகின்றது- மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் உள்ள 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை அரசு கல்லூரியாக மாற்ற சொல்லி அர்ரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும் அரசுக் கல்லூரி நகர்புறங்களில் மட்டுமேஅதிகம் உள்ளன. இதனால் கிராமப் புற மக்களின் மருத்துவர் கனவு கேள்விக்குறியாகி விடுகின்றன. இதனால் வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலங்களில் தரமான மருத்துவ வசதி கிடைக்கவும் அங்கும் மருத்துவர் உருவாகவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எனவே முதல் கட்டமாக 58 மாவட்டங்களிலும் 2ஆம் கட்டமாக 24 மாவட்டங்களிலும் அந்த அந்த மாவட்டத்த்டிலுள்ள அரசு மருத்துவமனைகளை கல்லூரியாக மாற்ற கட்டுமானம் மாற்றப்பட்டு வருகிறது. இதில் 38 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டது. இதற்காக 325 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும் நிதிக்காக ஒப்புதல் மனு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் எஞ்சிய வேலைகளும் விரைவில் நடைபெறும். இந்த முடிவு தேர்தலில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வண்ணம் அமைந்துள்ளது.

இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். உலகில் அதிக மருத்துவக் கல்லூரிகள்  உள்ள நாடுகளில் நம் இந்தியாவும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு முன்னேறும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவின் படி 1000 நபருக்கு 1 மருத்துவர் இருக்க வேண்டும் இன்னும் அதை நாம் எட்டவில்லை நம் நிலை 1000 நபருக்கு 0.5 மருத்துவர் என்ற நிலையே உள்ளது. புதிய இத்திட்டத்தின் படி உலக சுகாதர நிறுவனத்தின் பரிந்துரையின் படி நாம் குறிப்பிட்ட அளவிற்கு எட்ட வாய்ப்புள்ளது.