ஆஸ்திரேலியாவில் தந்தையின் இறுதிச் சடங்கில் குழந்தை செய்த செயலால் கண்ணீர் விட்டு அழுத மக்கள்..! இந்த கொடுமை எந்த குழந்தைக்கும் வேண்டாம் ஆண்டவா..!!

மரணங்கள் மிகவும் கொடுமையானது.. அதிலும் தந்தையின் அரவணைப்பு தேவைப்படும் வயதில் குழந்தைகளை விட்டு தந்தை நிரந்தரமாக பிரிவது என்பது கொடுமையிலும் கொடுமையான ஒன்றாகும். இந்த கொடுமையான நிகழ்விற்கு அறியாத வயதில் முகம் கொடுத்த குழந்தை ஒன்று தந்தையின் இறுதி சடங்கின் போது நடந்துகொண்ட முறை அங்குள்ள அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஆஸ்திரேலியாவில் தீ பரவி வருவது நாம் அறிந்ததே.. அந்த தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்களும் தன்னார்வலர்களும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு சிட்னியை சேர்ந்த ஆண்ட்ரூ மற்றும் ஜியோப்ரி ஆகியோரும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீ அணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பணியில் இருந்த போது மரம் உடைந்து விழுந்து மரணமடைந்தனர். இவர்களின் மரணச் சடங்கு இடம்பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் மரணச் சடங்கில் கலந்துகொண்டார். இறுதி சடங்கு ஊர்வலம் இடம்பெற்றுகொண்டிருந்த போது ..

தாயாரிடம் ஒப்படைக்கப் பட்ட தந்தையின் தொப்பியை வாங்கி தலையில் அணிந்த படி ஆண்ட்ரூவின் 1. 1/2 வயது குழந்தை சார்லோட் தந்தையின் சடலம் தாங்கிய பெட்டியை சுற்றி வந்த நிகழ்வு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. குழந்தை தந்தையின் தொப்பியை அணிந்து கொண்டது மட்டும் இன்றி தந்தையை போல் சைகை செய்தும் தந்தையை தேடியதும் இந்த மரணங்கள் எத்தனை கொடூரமானது என்பதை நிரூபித்தது..!!