“அம்மா ஆட்டோ அண்ணா என்னை கடத்துறார்” தொலைபேசியல் கதறிய கல்லூரி மாணவி.! பின் மாணவி செய்த கேவலமான செயல்.!!
அம்மா என்னை ஆட்டோவில் கடத்துகிறார்கள் என பெற்றோருக்கு கால் செய்து கதறிய கல்லூரி மாணவி தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. ஹைதராபாத்தில் பெப்ரவரி 10 திகதி கல்லூரியில் 2ம் ஆண்டு கல்வி பயிலும் மானவி ஒருவர் கணாமல் போனார். பின்னர் உடலில் சில காயங்களுடன் மயங்கிய நிலையில் மீட்கப் பட்டு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
குறித்த மாணவி 10திகதி கல்லூரி முடிந்து சில நிமிடங்களில் பெற்றோருக்கு கால் செய்து வழமையாக ஆட்டோவில் தன்னை அழைத்துச் செல்லும் நபர் தன்னை கடத்தி செல்வதாக கதறியுள்ளார்.பயந்து போன பெற்றோர் பொலீஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து பொலீஸார் தேடியதில் மீட்கப் பட்டார். அத்துடன் குறித்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் படவில்லை என வைத்திய அறிக்கையும் வந்தது.
குறித்த ஆட்டோ ட்ரைவரை கைது செய்த பொலீஸார் அவரிடம் விசாரணை செய்த போது சம்பவ தினத்தன்று தான் ஊரில் இல்லை என்றும் அதற்கான ஆதாரத்தையும் காட்டியுள்ளார், இதனால் மீண்டும் மாண்வியிடம் விசாரணை செய்த போது தடுமாற ஆரம்பித்துள்ளார்.
இதன் போது தான் வீட்டில் இருந்து வெளியே சென்று வாழ ஆசைப்பட்டேன், பெற்றோர் விடவில்லை, அதனால் கடத்தப் பட்டது போல் அம்மாக்கு கால் செய்தேன் என தெரிவித்ததுடன் இப்படி செய்தால் என் மீது அனுதாபம் வரும் என்றே செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த ட்ரைவர் பலமுறை என்னை திட்டியதால் அவரை பழி வாங்க நினைத்து மாட்டிவிட்டேன் என கூறியுள்ளார். குறித்த மாணவி கூறிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அவர் கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவியை பொலீஸார் எச்சரித்துள்ளனர்.!!