11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர்.! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.!!
தனியார் வகுப்பு ஆசிரியரால் 11 வயது மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் ஆங்கில வகுப்பிற்கு ஆசிரியர் ஒருவரிடம் சென்றுள்ளார்.
சில மாதங்கள் சென்ற மாணவி திடீரென வகுப்பிற்கு செல்ல முடியாது என அழுதுள்ளார். காரணம் கேட்ட போது மாணவி கூற மறுத்ததால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியிடம் அன்பாக கேட்ட போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டதாக கூறியதுடன் இனி மேல் வகுப்புக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பெற்றோர் பொலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து வெலிஓயா பொலீசார் குறித்த ஆசிரியரை கைது செய்து ஹெப்பட்டிகொலவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.!