இலங்கையில் ஒரே நாளில் 19 பேர் மரணம்.!! மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள்.!!
சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்து இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இலங்கையில் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப் பட்ட போதும் மே மாதத்திற்குள் ஓரளவு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
11 பேர் மட்டுமே மரணமடைந்த நிலையில் 3100 பேர் பாதிக்கப் பட்டு குணமடைந்தனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலை நவம்பர் மாதத்தில் ஆரம்பித்து தற்போது வரை 78 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 422 பேர் மரணமடைந்துள்ளனர்.
மக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு தடுப்பூசி கொடுத்து வருகிறது மக்களுக்கு, இலங்கையின் பொருளாதார நிலையில் கருத்தில் கொண்டு அரசி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது, இரண்டாம் அலை ஏற்பட அரசின் இந்த செயற்பாடு கூட காரணமாக இருக்கலாம் என மக்கள் கூறியுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாளின்றுக்கு 600 தொடக்கம் 1000 பேர் வரை பாதிக்கப் படுகின்றனர். அத்துடன் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 19 பேர் கொரோனா வைரஸினால் மரணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 19 பேர் மரணமடைந்தது இலங்கையில் இதுவே முதல் முறையாகும்.!!