" "" "

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம், மூடி மறைக்க 2 கோடி ரூபாய் பேரம்..!! வெளியான அதிரடி டுவிட்…!!

தூத்துக்குடி சாத்தான்குளம் விடயம் இன்று இந்த அளவுக்கு பேசப் படுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப் படுவது பாடகி சுசித்ராவின் முயற்சி தான். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மரணம் சாதாரணமாக போக இருந்த நிலையில் எமது நாட்டில் மட்டும் தான் மனிதர்களை பொலீஸார் அடித்துக் கொண்டால் அனைவரும் வாய்மூடி இருப்போம்,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் அமெரிக்காவில் பொலீஸாரால் கொல்லப் பட்டவருக்கு எதிராக உலகமே இன்று குரல் கொடுக்கிறது என வீடியோ வெளியிட்டார். நாளை யாரும் மிஞ்சப் போவதில்லை என அவர் பேசியவை வேகமாக வைரலானதை தொடர்ந்து சாத்தான்குளம் பொலீஸாருக்கு எதிரான புகார்கள் குவிந்தது.

இதனால் இன்றளவில் காவலர்களுக்கு எதிராக இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை செய்தும் வருகிறது. அன்றைய தினம் பணிபுரிந்த பெண் காவலர் ரேவதி வழங்கிய வாக்குமூலம் காவலர்களின் கைதுக்கு முக்கிய காரணமானது. இதனை தொடர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுசித்ரா தான் வெளியிட்ட இந்த தகவலை மூடி மறைக்க தனக்கு 2 கோடி ரூபாய் பேரம் பேசப் பட்டதாக தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பொதுவாக இது போன்ற விடயங்களில் பிரபலங்கள் கருத்து தெரிவித்தால் மக்கள் மத்தியில் வைரலாகும் சுசித்ரா செய்த சிறிய விடயம் இந்த அளவிற்கு சென்றது. சுசித்ராவிற்கு வாழ்த்துகள்..!!