நீங்கள் காபி (coffee) பிரியரா அல்லது தேநீர் பிரியரா.!? உண்மையில் இதில் எது ஆரோக்கியம் தெரியுமா.? இதோ இங்கிலாந்து செய்த ஆராச்சியின் முடிவு…!!

காபி பிரியர்கள் எப்போதும் தேநீர் பிரியர்களோடு சமரசமாக மாட்டார்கள். இருவருக்குமிடையே எப்போதும் ஒரு பனிப்போர் ஒன்று நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஆனால் நினைவில் கொள்ளுங்கள் காபி, தேநீர்  இரண்டுமே காஃபினைக்  (Caffine) கொண்டிருக்கின்றன.இந்த காஃபின் என்றால் என்ன?  கஃபீன் என்பது ஒரு வேதியப் பொருள். இது உட்சென்றவுடன்  மூளையில் ஆல்பா அலைகளை தாக்கி மூன்று அல்லது நான்கு மணி நேரம் வரை உடம்பையும் மனத்தையும் உற்சாகப்படுத்தி விழிப்புடன் வைத்திருக்கும். 

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஒரு கப் காபியில் 80 – 120 mg கஃபீன்  அடங்கியுள்ளது. தேநீரில் 30-65 mg கஃபீன் உள்ளது.சரி இனி இந்த காபி , தேநீர் இந்த இரண்டு விடயங்களும் எந்தெந்த விடயங்களில் நமக்கு நன்மை புரிகின்றன, தீமை புரிகின்றன என்பதை ஐந்து விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கலாம்.இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, காபி குடிப்பவர்கள், தேநீர் குடிப்பவர்களைக் காட்டிலும்  இரவில் தூங்குவது கடினமாக இருப்பதைக் காண்கிறார்கள். இங்கே தேநீர்  பிரியர்கள்  வெற்றிபெற்றுவிட்டார்கள்.

காபி , தேநீர் இரண்டுமே உங்கள் முத்து வெள்ளைப் பற்களைப்  பாதிக்கச் செய்பவை. , ஆனால் இதில் எது மோசமாக பதிப்படையச் செய்கின்றது தெரியுமா? தேநீர்தானாம். வல்லுனர்களின் கருத்துப்படி, தேயிலையில் உள்ள  நிறமிகள் உங்கள் பல் ஈறுகளை காபியை விட அதிகமாக பாதிக்கின்றன. இங்கு காபி பிரியர்கள்  வெற்றி பெற்றுவிட்டனர்.

தேயிலை மற்றும் காபி பிரியர்களிடையே எடுத்து நோக்கினால், பெரும்பாலான நிபுணர்கள் தேநீர் குடிப்பவர்கள் காபி குடிபவர்களை விட சிக்கலான வாழ்க்கை நிலைமையை கையாளுவதில் சிறப்பாக செயற்படுபவர்களாக இருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.. அதாவது எந்தச் சிக்கலா இருந்தாலும் காபி பிரியர்களை விட தேநீர் பிரியர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்களாம்.

இரண்டுமே சம அளவுகளில் இருதயத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகின்றன. ஆனால் அதிகளவு காஃபினானது இதய துடிப்பை அதிகரித்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிப்பதால் இதய நோயாளிகளும் இதை தவிர்ப்பது நல்லது.காபி, தேநீர் இரண்டிலுமே உள்ள காஃபினானது  எலும்புகளில் இருந்து சுண்ணாம்புச் சத்தை வெளியேற்றி எலும்புகளையும் பற்களையும் பலவீனப்படுத்துவதால் நல்ல ஆரோக்கியத்திற்கு இவற்றை தவிர்ப்பது நல்லது என்று ஆய்வுகள் உரைக்கின்றன.

எலும்புத் தேய்மானத்திற்கு தேயிலையே அதிகம் காரணமாகின்றது என்பது நிரூபணமாகியுள்ளது.அதன்படி பார்த்தால் தேயிலையை விட காபியே அதிகளவு காஃபினைக் கொண்டிருப்பதால் அது உடல்நலத்திற்கு கேடாக அமைகின்றது. எது எப்படீயோ எதையும் அளவோடு எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமே.!