" "" "

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தீ பரவல்.! தீ விபத்து ஏற்பட்டதா? ஏற்படுத்தப் பட்டதா.,? முழு விபரம்.!!

கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து உயர் நீதிமன்றத்தில் முக்கிய கட்டடத்தில் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது,

இது பற்றி குறித்த பகுதியில் இருந்து கிடைத்த செய்திகளின் அடிப்படையில் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்ததுடன் தீயை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீ பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக சட்ட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையில் உயர் நீதிமன்றத்தில் தீ பரவல் ஏற்பட்ட பகுதியில் முக்கிய அரசியல் மற்றும் பிரபலங்களின் பைல்கள் இருந்ததாகவும்,

இவை தீயில் சிக்கியிருந்தால் பல கொலை கொள்ளை வழக்கின் குற்றவாளிகள் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்படுத்தப் பட்டதா அல்லது ஏற்பட்டதா என்பது தொடர்பான விசாரனைகளை பொலீஸார் ஆரம்பித்துள்ளனர்..!!