கிரிக்கெட் ரசிகர்களின் இதய துடிப்பை அதிகரித்து உலகப் கோப்பையை இங்கிலாந்து தனதாக்கியது எப்படி.? இதோ முழு விபரம்..!!

2019ம் ஆண்டிற்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 31ம் திகதி ஆரம்பமானது. முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெற்றது இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று வரையில் போட்டிகள் இடம்பெற்றது. இந்த உலகக்கிண்ண தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், என 10 அணிகள் மோதியது.

இதில் அரையிறுதி சுற்றுக்கு முறையே இந்தியா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் தேர்வாகின. இதில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் விளையாடும் என எதிர்பார்த்த நிலையில் செமி பைனலுடன் வெளியேற சாம்பியன் அவுஸ்திரேலிய அணியும் வெளியேறியது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று விளையாடின.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

முதலில் துடுபெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது 242 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் நிறைவில் 241 ஓட்டங்கள் எடுத்தது, இதனால் போட்டி டை ஆனது. இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் அறிவிக்கப் பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது.

16 ஓட்டங்களை நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் 15 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்து மீண்டும் போட்டி டை ஆனது. இதனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப் பட்டது. கிரிக்கெட் என்ற ஒன்றை உலகிற்கு அறிமுகப் படுத்திய நாடான இங்கிலாந்து 23 வருட போராட்டத்தின் பின் முதல் முறை உலக கோப்பையை வென்றது.

இது வரை நடந்த உலக கிண்ண போட்டிகள் மட்டும் இன்றி எந்த ஒரு போட்டியிலும் இப்படி ஒரு விறுவிறுப்பு இருக்கவில்லை. ஏகப்பட்ட போராட்டங்களின் பின் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணிக்கு புரட்சி செய்தி சேவையின் வாழ்த்துக்கள். இறுதிவரை போராடிய நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்..!!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.