" "" "

பிரபல தொலைக்காட்சியை விட்டு வெளியேறினாரா குக் வித் கோமாளி புகழ்.!? இதற்கு புகழ் கொடுத்த பதிலடி . !!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து புகழ் வெளியேறியதற்கு பல காரணங்கள் வதந்திகள் வெளியான தொலைக்காட்சியை விட்டு வெளியேறவில்லை, நிகழ்ச்சியை விட்டு மட்டுமே வெளியேறியுள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார். பிரபல தொலைகாட்சில் காமெடி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான புகழ் பின் தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து தனது திறமையை நிரூபித்தார்.

இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பை சரியான முறையில் புகழ் பயன்படுத்தியதால் தற்போது கைவசம் 5 திரைப்படங்கள் வைத்துள்ளார். அண்மையில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்ட புகழ் அதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார். சக போட்டியாளர்கள் வாழ்த்தியே அனுப்பி இருந்தனர்.

ஆனால் ஒரு சிலர் புகழ் குறித்த தொலைக்காட்சியை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகளை வைரலாக்க அதுக்கு பதிலடியாக நான் தொலைக்காட்சியை விட்டு வெளியேறவில்லை, வெளியேறவும் மாட்டேன். திரைப்படம் நடிக்க செல்கிறேன் மீண்டும் வருவேன் என வீடியோ வெளியிட்டுள்ளார். பலரும் புகழுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.!