" "" "

கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் அவதி படுகின்றீர்களா.!? முழு வீட்டையும் ஏசி இன்றி குளிர்மையாக்கலாம்..! இதோ சூப்பர் டிப்ஸ்..!!

கோடை காலங்களில் வீட்டில் இருக்கவேண்டும் என்றால் மின்விசிறியின் துணை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலமை வந்துவிட்டது. காலநிலை மாற்றங்களும் அதற்கேற்றாற்போல் வெப்பத்தை வாரியிறைத்துக்கொண்டுதான் உள்ளன. மரங்களைத் தறித்து கட்டடங்களைக் கட்டி விட்டோம். ஆனால் வெப்பத்தை சமாளிக்கத்தான் ஏதேதோ செய்யவேண்டி இருக்கின்றது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அந்த வகையில் வெக்கை காலத்தில் வீட்டை குளுமையாக வைத்திருப்பதற்கு சில ஐடியாக்கள் இதோ உங்களுக்காக.வீட்டு முற்றத்திலும் வாரண்டாவிலும் சிறு சிறு பூங்செடிகளை வையுங்கள். பூங்செடிகள் எப்போதும் வீட்டிற்கு அழகை மட்டுமல்ல குளுமையையும் கொடுக்கக் கூடியவை.

அதிலும் விதவிதமான குரோட்டன்களை சிறு சாடிகளில் நட்டு அந்த சாடிகளை வீட்டின் முன்னும் வாரண்டாவிலும் வைத்தால் வீடு குளிர்ச்சியாக இருப்பதோடு அழகாகவும் இருக்கும்.குளிர்ச்சியான நிறத்தில் பெயிண்ட் அடியுங்கள்.வீட்டின் அழகை மெருகூட்டுவதிலும் வீட்டிற்குக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதிலும் வீட்டுச் சுவர்களுக்கு அடிக்கின்ற பெயின்டானது முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்த வகையில்  வீட்டிற்கு வெளிர் நிறத்தில் அதுவும் சூரியக் கதிர்களைின் வெப்பத்தை எதிர்க்கும் வகையில் பெயிண்ட அடித்தால் வீடு மிகவும் களர்ச்சியாக இருக்கும் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். வீட்டின் உள்ளே சிறு நீர்வீழ்ச்சி வைக்கலாமே உங்கள் வீட்டைக் குளிர்மையாக வைத்திருக்க இது மிகவும்  அற்புதமான வழிமுறையாகும்.

சிறிய கற்களைக் கொண்டு சிறிய நீர் விசிறும் வசிறிகளைக் கொண்டு இந்த நீர்வீழ்ச்சியை வீட்டிலேயே உருவாக்கலாம். இந்த நீர்வீழ்ச்சியானது வீட்டை நன்கு குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்.யன்னல்களை அதிகரித்து மென்மையான திரைச்சீலைகளையும் வையுங்கள். சிலருடைய வீட்டைப் பார்த்தால் இருள் மயமாக மூடிக்கட்டியதாக இருக்கும்.

சுத்தமான காற்று வரவேண்டுமென்றால் யன்டனல்களை அதிகளில் வைக்க வேண்டும். அத்தோட யன்னல்களக்குப் போடும் தீரைச்சீலைகள் வெளிர் நிறத்திலும் மென்மையான கொட்டன் துணியிலும் இருந்தால் வீட்டில் அதிக வெப்பமாக இருக்காது.