" "" "

கொரோனா தடுப்பூசியை இவர்கள் எடுத்துக் கொள்ளவே கூடாதாம் !! யார் யார் கொரோனா தடுப்பூசி போடலாம், யார் போடக் கூடாது இதோ முழு விபரம்.!!

இந்தியா கொரோனா தடுப்பூசி தயாரித்து பல நடுகளுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவின் இந்த செயலை உலக நாடுகள் பாராட்டி வருகின்ற நிலையில் இந்தியவிடம் இருந்து 5 லட்சம் தடுப்பூசிகளை இலங்கை அரசும் பெற்றுக் கொண்டது. இலங்கை முழுவதும் தடுப்பூசி போடும் வேலை திட்டம் நேற்றைக்கு முன் தினம் ஆரம்பமானது. தற்போது வரை 37 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது.

இலங்கை அரசு கொரோனா தடுப்பூசியை இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. 37 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட போதும் இதுவரை யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக இலங்கையின் வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் மீடியாக்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதில் கொரோனா தடுப்பூசி என்றதும் பலர் பயப்பிடுகின்றனர். இதில் பயப்பட ஒன்றும் இல்லை. ருபெல்லா, போலியோ, போன்றவற்றை போல் கொரோனா தடுப்பூசியும் ஒன்று. ஆரம்பத்தில் இவற்றுக்கு பயந்தது போல் மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயப்படுகின்றனர். கொரோனா தடுப்பூசியை ஆரோக்கியமாக இருக்கும் அனைவரும் போட்டுக் கொள்ளலாம்.

ஆனால் மருத்துவ ஆலோசனை மிக முக்கியம். புதிதாக கடினமான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தடுப்பூசியை சில நாட்கள் விட்டு போட்டுக் கொள்ளலாம். ஊசியால் அலர்ஜி உள்ளவர்கள் போட்டுக் கொள்ள கூடாது. குறிப்பாக உடலில் அலர்ஜியால் வீக்கங்கள் ஏற்படுபவர்கள் போட்டுக்கொள்ள கூடாது. வைத்திய ஆலோசனை முக்கியம்.

போடவே கூடாதவர்கள் என்றால் கர்ப்பிணி பெண்கள். பாலூட்டும் தாய்மார்கள்,கர்ப்பமடைய முயற்சி செய்பவர்கள் தடுப்பூசி போட கூடாது. இதற்கான காரணம் இன்னும் இவர்கள் எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது, ஆய்வு முடியும் வரை கர்ப்பிணி பெண்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்..!!