குடும்பத்தினரையும் கிராமத்தையும் தனக்கு உள்ள கொரோனா வைரஸிடம் இருந்து காப்பாற்ற தற்கொலை செய்துகொண்ட நபர்..!இந்தியாவில் நடந்த சோக சம்பவம்..!!

கொரோனா வைரஸால் சீனாவிப் வுஹான் நகரமே சுடுகாடாக மாறிகொண்ருக்கும் நிலையில், உலக நாடுகள் அச்சத்தில் இருக்கிறது. அதே போல் மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த நிலையில் இந்தியாவில் நபர் ஒருவர் தன் குடும்பத்தினருக்கோ, கிராமத்தினருக்கோ கொரோனா வைரஸ் தாக்கிவிட கூடாது என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திராவில் சித்தூர் தொட்டம்பேடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணையா என்ற 54 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திடீரென இவருக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால் வைத்திய சலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் இவருக்கு சிறுநீரக தொற்று இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ள நிலையில் தூசுகளால் அவருக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதால் முகத்தில் பேஸ் மாஸ்க் மாட்டியதுடன் கழட்ட வேண்டாம் என கூறி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இதனால் தனக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக நினைத்துக் கொண்ட இவர் வீதியில் யாருடனும் பேசாமல் வீட்டிற்கு சென்றதும் கதவை மூடிக் கொண்டுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அவருடன் பேச்சு கொடுத்த போது எனக்கு கொரோனா உள்ளது யாரும் பேசாதீர்கள் இது ஊருக்கும் பரவி விடும் என உளறி உள்ளார்.

எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. சிறிது நேரத்தில் சரியாகி விடும் என நினைத்து குடும்பத்தினர் அமைதியான போது பாலகிருஷ்ணய்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொரோனாவை பரப்ப்ப முயற்சிக்கும் மனிதர்களுக்கு நடுவில் இல்லாத கொரோனா கிராமத்தினரை பாதிக்க கூடாது என தற்கொலை செய்து கொண்டவரால் கிராமமே சோகத்தில் உள்ளது..!!