" "" "

இலங்கையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கு கூட பக்க விளைவுகள் ஏற்படவில்லை.! சுகாதார அமைச்சு அறிவிப்பு.!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் இருந்து தடுப்பூசி வழங்கப் பட்டு வருகிறது. இந்தியாவின் அயல் நாடான இலங்கைக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப் பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் இலங்கையில் முதல் தடுப்பூசி போடப்பட்டது.

இராணுவத்தினர் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு முதல் தடுப்பூசி வழங்கப் பட்டது. இதனை தொடர்ந்து நேற்றும் இன்றும் இலங்கை முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு,காலி, உட்பட 25 மாவட்டங்களுக்கும் சனத்தொகை ரீதியாக தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது. சில நாடுகளில் தடுப்பூசியால் சிலர் மரணமடைந்த நிலையில் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் தடுப்பூசியால் இது வரை யாருக்கும் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை, இதனால் இலங்கை மக்கள் தடுப்பூசியை பயமின்றி எடுத்துக் கொள்ள முடியும் என் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.!!