" "" "

பண்டிகை காலத்தில் இனிப்பு உணவு வகைகளை தவிர்த்துவிட்டு இதனை சாப்பிடுங்கள்.! மக்களுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!!

பண்டிகைகள் காலத்தில் இனிப்பு வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நந்தார், மற்றும் புதுவருடத்தை மக்கள் கொண்டாட தயாராகி வரும் நிலையில் கொரோனாவை பற்றியும் கவனத்தில் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள், சத்திர சிகிச்சைகள் செய்துகொண்டவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள்,வயதானவர்கள், புற்று நோய், மாரடைப்பு போன்றவற்றிற்கு சிகிச்சை பெறுபவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக காணப்படுவார்கள், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவது இலகுவாக இருக்கும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பண்டிகை காலங்களில் இனிப்பு அதிகம் கொள்வனவு செய்யப் படும் இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புகள் உள்ளது, அதே போல் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்ளும் போது அவர்களை நொடியில் கொரோனா வைரஸ் தாக்கி விடுகிறது. கொரோனா வேகமாக அதிகரித்து வரும் இந்த நிலையில் பண்டிகை காலத்தில் இனிப்புகளுக்கு விடுதலை கொடுத்து விடுங்கள்.

அத்துடன் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பண்டிகை கால உணவாக புதிய மரக்கறி, பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..!/