" "" "

புதுமணத் தம்பதிகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உறவில் ஈடுபடலாமா? எத்தனை நாட்களில் குழந்தையை எதிர்பார்க்கலாம்.? முழு விபரம் இதோ.!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சில நாடுகளில் பெண்களை கர்ப்பம் தரிப்பதில் இருந்து விலகி இருக்கும்படி சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்து வருகிறது. அயல் நாடான இலங்கையில் கர்ப்பிணி பெண்களை காப்பாற்ற முடியாமல் இருப்பதால் எதிர்வரும் சில மாதங்களுக்கு கர்ப்பத்தை தவிர்க்குமாறும் இதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழும் படியும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் திருமணமான தம்பதிகள் உறவில் ஈடுபடலாமா இதனால் ஏற்படும் கர்ப்பம் சரியா.?

தடுப்பூசி போட்டு எவ்வளவு நாட்களுக்கு பின் கர்ப்பமாக வேண்டும் என பிரபல கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரபல இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார். அதனை தற்போது தங்களுக்காக பகிர்கின்றோம். கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள இந்த நாட்களில் முடிந்த வரை உறவினர்களுடன் திருமணம் செய்யுங்கள். திருமணத்தின் பின் நீங்கள் உறவில் ஈடுபவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் திருமணமாகி முதல் மாதங்களிலேயே கர்ப்பமாக நினைப்பவர்கள் திருமணத்திற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். திருமணத்தின் பின் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தாம்பத்திய உறவுக்கு பாதிப்பு இல்லாவிட்டாலும் உடல் சோர்வு, உடல் வலி காய்ச்சல் ஏற்படுவதால் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் போகும். திருமணத்தின் பின் இருவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் ஆகக் குறைந்தது 1 மாதம் கர்ப்பமாக வேண்டாம்..

ஒரு மாதம் வரை கவனமாக இருங்கள் அதன் பின் கர்ப்பமாகலாம். கர்ப்பத்தின் பின் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை விட முறைப்படி 2 டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்ட பின் கர்ப்பமாகலாம்..இது குழந்தைக்கும் உங்களுக்கும் பாதுகாப்பாகும்.குறிப்பாக இரண்டு டோஸும் எடுத்து ஆகக் குறைந்தது 1 மாதம் வரை கர்ப்பமாக வேண்டாம்.!