கிரேஸி மோகனின் வாழ்க்கை பாதை- சுவாரசியமான தகவல்கள்

கிரேஸி மெக்கானிக் இன்ஞ்சினியரிங் படித்துக் கொண்டே நாடகம் எழுதிக்கொண்டருந்தார், அவர் எழுதிய முதல் நூல் கிரேட் பாங் ராபரி அதன் மூலம் சிறந்த எழுத்தாளர் என்னும் பட்டத்தை கமல்ஹாசன் கையால் பெற்றுக்கொண்டார். கே. பாலச்சந்திரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் திரைப்பட வாழ்க்கைக்குள் நுழைந்தார். இவரை கமல் சரியாக பயன்படுத்திக் கொண்டார். கமலும் இவரும் நல்ல நண்பர்கள், சத்தியலீலாவதி, காதலா காதலா, பஞ்சதந்திரம், மைக்கேல் மதன காமராஜா, அபூர்வ சகோதர்கள்,பம்மல் கே சம்பந்தம்,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என அத்தனை கமல் படத்திலும் இவருடைய வசனங்கள் இருக்கும் இதில் இன்றளவும் வசூல் ராஜா m.b.b.s தனக்கென்று ஒரு முத்திரை பதித்துள்ளது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இவர் வசன ஆசிரியர், நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த ஓவியர். 60 க்கும் மேற்பட்ட கலை ஓவியங்கள் இவர் வரைந்துள்ளார். இவர் பல நாடகங்களை இயக்கி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்திஉள்ளார். இவர் எழுதிய சாக்லேட் கிருஷ்ணா 3 வருடத்தில் 500 தடவை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திரையுலகம் எல்லாம் ட்விட்டரில் தன் வேண்டுதலை பதிவு செய்து கொண்டிருக்க கமல் நேரில் சென்று பார்த்துள்ளார். தீவிர சிகிச்சை மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எனக்கு விவரம் தெரிந்து அவருடைய நகைச்சுவையில் பிடித்தது வசூல் ராஜாவில் ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளிவரும் பொழுது (திறந்த வீட்டுல ஏதோ எச்சிக்கலை நுழையுராப்ல) என்று சொல்வார் பிரபு கத்தியைக் காட்டியதும் எச்சிகலை சிங்கம் எச்சிக்கலை புலி என்று பல்டி அடிப்பார் அது எனக்கு மிகவும் பிடித்த காமெடி உங்களுக்கு பிடித்ததை நீங்கள் இங்கே பதிவிடலாம். இவர் கலைமாமணி என்னும் பட்டத்தை தமிழக அரசால் பெற்றார்.