உலக கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து…!!!

உலக கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டியின் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. மேலும் இந்த இறுதிப்போட்டி லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

மேலும் இங்கிலாந்தை பொருத்த வரைக்கும் ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜோனி பேர்ஸ்டோவ் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்து வருகின்றனர். அணித்தலைவர் மோர்கன் மற்றும் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நியூசிலாந்து அணியை பொறுத்த வரைக்கும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தொடர் முழுவதும் அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதிலும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக்கிண்ண இறுதி போட்டியில் மோதுவதால் எந்த அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றும் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் இன்றைய தினம் நடைபெற்று வருகின்ற இறுதிப்போட்டியில்.

இங்கிலாந்து: ஜேசன் ரோய், பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரோஸ் டெய்லர், டாம் லாதம், நீஷம், கொலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், பெர்குசன், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட். போன்றவர்கள் மிக அதிக முயற்சியோடு தொடரில் விளையாடி வருகின்றனர்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.