பொடுகு தொல்லையால் அவஸ்த்தை படுபவர்களுக்கு இலவச இலகுவான டிப்ஸ்..! இதில் ஒரு முறையை பயன்படுத்துங்கள்..!!

பொதவாக இந்தத் தலைமுறையினரில் பலரக்கும் இருக்கின்ற பெரிய பிரச்சினையே தலைமுடி தொடர்பான பிரச்சினைகள்தான். அதிலும் இந்தப் பொடுகுப் பிரச்சினை இருக்கே அது பெரிய பிரச்சினைதான் எப்பவுமே!
சரி அதுக்க என்னவெல்லாம் தீர்வு இருக்கின்றது தெரியுமா? வாரம்  ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

தயிர், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து தலையில் தடவி சில மணிநேரம் கழித்து குளித்தால் பொடகு பிரச்சினை நீங்கும்.வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் உஸ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லையம் நீங்கும்.முதல் நாள் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து மறுநாள் அதை தலையில் தேய்த்துக் குளித்தால்   பொடுகு நீங்கும்.

வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.பாசிப்பயறு மாவு , தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளிக்கவேண்டும்.கற்றாழைச் சாற்றை தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

சின்னவெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதை எடுத்து தலைக்குத் தேய்த்தக் குளித்தால் தலைச் சூடு மறைந்து குளிர்ச்சியடைவதுடன் பொடுகுத் தொல்லையும் நீங்கும்.
வேப்பிலைச் சாறும் துளசிச் சாறும் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
தேங்காயெண்ணெயுடன் வேப்பம் எண்ணெயையும் சேர்த்து காய்ச்சி அந்தக் கலவையைத் தேய்த்து வந்தாலும் பொடுகுத் தொல்லை நீங்கும்.