பெண் தோழிகளுக்காக தன்னை கோடீஸ்வரனாக காட்டில் கொள்ள சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் பதிவேற்றிய இளைஞன்..! பின் நடந்த கொடூரம்..!!

தன்னை கோடீஸ்வரனாக கட்டிக் கொள்ள இளைஞர் ஒருவர் செய்த செயல் அவரை மரணம் வரை அழைத்துச் சென்றுள்ளது. Portuguese நாட்டை சேர்ந்த ராப் பாடகரான mota JR என்றழைக்கப் படும் David mota என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த இளைஞர் சமூக வலைத்தளத்தில் அதிக பிரபலமாக இருந்துள்ளார்,

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இவருக்கு ஏராளமான பெண் தோழிகள் சமூக வலைத்தளத்தில் இருந்ததால் அவர்களுக்கு தான் பெரிய கோடீஸ்வரன் என்று காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களிடம், பணத்தை வாங்கி கட்டிலில் போட்டு புகைப்படம் எடுத்ததுடன் நண்பர்களின் நகைகளை வாங்கி போட்டு புகைப்படம் எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் விலை உயர்ந்த கார்கள், மற்றும் பிரபல பில்டிங் போன்றவற்றில் இருந்து புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த இளைஞரை பலரும் கோடீஸ்வரர் என நம்பி இருந்துள்ளனர். அண்மையில் குறித்த இளைஞர் கடத்தப் பட்டதுடன் அவருடன் இருந்த அவரது காதலி துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கப் பட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண்ணின் புகாருக்கமைய பொலீஸார் தேடியதில் Motaவின் வீட்டில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் அவரது சடலம் மீட்கப் பட்டுள்ளது. இவரின் உடலில் பல காயங்கள் இருந்துள்ளது, அத்துடன் குறித்த இளைஞனின் வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது, இதனை தொடர்ந்து பொலீஸ் விசாரணையில் தெரிய வந்த விடயங்கள் அதிர வைத்துள்ளது.

குறித்த இளைஞன் பணத்துக்காக கடத்தப் பட்டதுடன் இவரது வீட்டில் பணம் நகை எதுவும் கிடைக்காததால் சித்திரவை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டது தெரிய வந்துள்ளது. இளைஞனின் தேவையற்ற செயற்பாடுகளே மரணத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர், தொடர்ந்தும் பொலீஸார் விசாரணை மேட்கொண்டு வருகின்றனர்..!!