டயானா மரியம் குரியன் எப்படி நயன்தாரா ஆனார்.!? நயன்தாரா என்று பெயர் மாற்றியது யார்.!? பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்..!

ஐயா திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா… முதல் படமே சுப்ரீம் ஸ்டாருடன் சூப்பர் ஹிட்டானது. அடுத்த வாய்ப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மிகப் பெரிய வெற்றி பெற்றது.. அதனை தொடர்ந்து விஜய், அஜித், என முன்னணி நடிகர்களுடன் நடித்த நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரானார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

இரண்டு காதல் தோல்விகள், ஏராளமான சர்ச்சைகள் என இருந்தாலும் அவரது சினிமா பயணம் முன்னோக்கி சென்றுகொண்டிருக்குன்றது. தற்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் நயன்தாராவிற்கு இந்த வருட இறுதியில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

நயன் தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த பெயர் எப்படி நயன்தாரா ஆனது என்பதும் அதன் அர்தமும் தான் யாரும் அறியாததாம். நயன்தாராவின் முதல் திரைப்படம் மலையாளத்தில் ” மனசினக்கரே” என்ற திரைப்படமாகும்.இதில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமான போது இயக்குனர் சத்யன் டயானா மரியம் என்ற பெயரை மாற்றுவதற்கு சில பெயர்களை தேர்வு செய்துள்ளார்.

இதில் அனைவருக்கும் நயன்தாரா என்ற பெயர் பிடித்துப் போனதாம். நயன் என்றால் நளினம் என்றும் தாரா என்றால் நட்சத்திரம் என்றும் பொருளாம். அதனால் நளினாமான நட்சத்திரம்..என பொருளாம். இந்த பெயரை நயந்தாராவிற்கு சூட்டியவர் பிரபல நடிகையான ஷீலா வாம்..! இப்போதும் நயன்தாரா ஷீலாவிற்கு நன்றி சொல்கிறாராம்.!

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

மேலும் செய்திகள்: