" "" "

மொபைலில் தகாத படம் பார்த்து இண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவர்.! பின் நடந்த கொடூரம்.!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சுபாஸ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் தம்பதியினர் தங்கள் இரண்டு வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் துணைக்கு 16 சிறுவனை துணைக்கு வைத்திருந்துள்ளனர்.

மிகவும் கஷ்டப் பட்ட குடும்பத்தில் இருந்து குறித்த சிறுவன் வந்ததால் தங்கள் மகனை போல் பார்த்துக் கொண்டதுடன் டச் மொபைல் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர். வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்வதுடன் குழந்தையுடன் விளையாடுவதும் தான் குறித்த சிறுவனின் வேலைகள். இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் நள்ளிரவில் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கதறி அழுதுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குழந்தையின் சத்தம் கேட்ட தம்பதியினர் உடனடியாக குழந்தையின் அறைக்கு சென்ற போது உள் பக்கம் கதவு மூடம்பட்டிருந்ததால் அதிர்ந்து போயுள்ளனர். நடந்த விபரீதத்தை உணர்ந்துகொண்ட கணவர் குறித்த சிறுவனிடம் கோபமாக பேசி மிரட்டி கதவை திறக்கும் படி கூற கதவை திறந்துள்ளான்..

உள்ளே சென்று பார்த்த போது இரண்டு வயது குழந்தையின் மர்ம பிரதேசத்தில் இரத்தம் வந்துள்ளது. இதற்கிடையில் சிறுவன் வீட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளான். உடனடியாக குழந்தையை வைத்தியசாலை எடுத்து சென்ற போது குழந்தையின் மர்ம பிரதேசங்கள் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப் பட்ட நிலையில் இரயில் நிலையில் நின்ற சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் பொலீஸார் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். இது குறித்து சிறுவன் பொலீஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் மொபைலில் தகாத திரைப்படங்கள் பார்த்தே இப்படி செய்ததாக தெரிவித்துள்ளான்.!!