" "" "

ஸ்ரீலங்காவில் தங்கிய பிரித்தானியருக்கு இப்படி ஒரு நிலையா??

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பல மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, இடிமின்னல், போன்ற இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல நோய்கள் பரவியுள்ளது.

!Advert!

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஸ்ரீலங்காவில் பல பகுதிகளில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றது இந்த நோய் சிறியவர், பெரியோர் என பரபட்சம் இன்றி அனைவரையும் தாக்கக்கூடியதாகும். அந்த வகையில் பிரித்தானியாவின் பிரெஸ்டன் (Preston) நகரத்தைச் சேர்ந்த 52 வயதுடைய கோலின் வெயிட்சைட் என்பவர் கட்டிட நிர்மாண துறையில் பணிபுரிந்து வந்தார்.

!Advert!

கோலின் அபுதாபி, டுபாய் போன்ற நாடுகளில் ஏற்கனவே பணி புரிந்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் கோலின் நுளம்பு கடியால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த மாதம் 14 ஆம் திகதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கணவரை கவனித்து கொள்ள கோலினின் மனைவி கரோலின் இலங்கைக்கு வந்துள்ளார். தொடர்ந்து கோலினுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

!Advert!

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோலின் நேற்று இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளானர். இது தொடர்பாக கோலினின் மனைவி கரோலின் கூறுகையில், நிம்மதியாகவும், நிரந்தரமாகவும் உறங்குங்கள் கோலின், என் கணவர் குணமடைந்து விடுவார் என எதிர்பார்த்தோம், ஆனால், பக்கவாதம் ஏற்பட்டு அவர் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது, அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.