புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? கண்டுபிடித்தால் சொல்லுங்க பார்ப்போம்..எல்லோரும் கொண்டாடப் பட்ட நடிகை தான்.!!
90களின் பின் வந்த நடிக நடிகைகளில் ரசிகர்களின் மனதில் குடும்ப குத்துவிளக்கு நடிகை என கொண்டாடப் பட்டவர் நடிகை தேவயானி. சரத்குமார்,நெப்போலியன் ஆரம்பித்து விஜய், அஜித், கமலஹாசன், என ஒட்டுமொத்த நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை தேவயானி, இவரது அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் கட்டுப் பட்டு கிடந்தனர்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்த போது சீரியல் பக்கம் திரும்பிய தேவயானி கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானார். அதன் பின் திருமணம் குழந்தைகள் என பிஸியான தேவயானி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். பின்னர் சில நாட்கள் காணாமல் போய் இருந்த தேவயானி புது புது அர்த்தங்கள் சீரியலின் மூலம் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இணையத்தில் தேவயானியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட குழந்தையில் இவ்வளவு அழகாக இருந்தாரா என கேட்டு வருகின்றனர்.!