" "" "

சப் இன்ஸ்பெக்டரால் 18 வருடங்களாக நைட்டி அணியும் நபர்! வெளியாகி உள்ள வியக்க வைக்கும் காரணம்!

வேஷ்டியை மடித்துக் கட்டி கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஏகியா என்பவர் சுமார் 18 வருடங்களாக நைட்டி அணிந்து வியாபாரம் செய்துவரும் விடயம் அபைவரையும் வியக்க வைத்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம், கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் தான் எகியா சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அதே பகுதியில் கையேந்தி பவன் வைத்து நடந்தி வருகிறார்.

இன்றில் இருந்து 18 வருடங்களுக்கு முன்பு வேஷ்டியை மடித்து கட்டி வியாபாரத்தில் பிஸியாக எகியா இருந்த போது அந்த பகுதி சப் இன்ஸ்பெக்டர் வந்துள்ளார். எகியா பிஸியாக இருந்ததால் வேஷ்டியை மடித்து கட்டிய படியே இருந்தார். இதனை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் எகியாவை தகாத வார்த்தைகளால் திட்டினார். சாதாரணமாகவே கோபக்காரரான எகியா உடனடியாக சென்று மனைவியின் நைட்டியை அணிந்து வந்து வியாபாரம் செய்தார்.

அதன் பின் அவர் வேறு ஆடைகள் அணியவே இல்லை 18 வருடங்களாக நைட்டி மட்டுமே அணிகிறார். ஏகியாவின் கோபம் எந்த அளவு எனில் பணமதிப்பிழப்பின் போது தன்னிடம் இருந்த 23 ஆயிரம் இந்திய ரூபாவை மாற்ற இரண்டு நாட்களாக லைனில் நின்றார்.

இருப்பினும் பணத்தை மாற்ற முடியவில்லை, இதனால் மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் 23 ஆயிரம் ரூபாய்களையும் தெருவில் போட்டு எரித்து போராட்டம் நடத்தினார். அத்துடன் ஒரு பக்க தலைமுடி மற்றும் மீசையை எடுத்து போராட்டம் நடத்தினார். ஊர் மக்கள் இவரது கோபத்தை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தனர். 18 வருடமாக ஏகியா என்ற பெயர் மாறி மெக்ஸி ( நைட்டி) மாமா அல்லது அண்ணா என்றே அழைக்கப் படுகிறார்.!