உடல் சோர்வு, கை கால்கள் வலி, தலை சுற்று, பித்த வாந்தியா.? இதெற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு இது தான்.!!
உடல் சோர்வு இது கஷ்டபட்டு வேலை செய்தால் மட்டுமே வரும் என அன்றைய காலங்களில் இருந்தாலும் இன்று காலையில் எழும்புவது, குளிப்பது, சாப்பிடுவது இப்படி எல்லாவற்றிக்கும் சோம்பேறியாக இருக்கிறது என சொல்வார்கள் அல்லது அம்மாடியோ என்னால் முடியவில்லை என் உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது என சொல்வார்கள்.
எந்த வேலையாக இருந்தாலும் முழு மனதுடன் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த நாள் சிறப்பாக அமைவதுடன் குறித்த வேலையும் சிறப்பாக முடியும். ஆனால் உடல் சோர்வு ஏற்படும் போது எதிலும் கவனம் செலுத்த முடியாது கை கால்கள் கூட வலுவிழந்து காணப்படும். இதயம் படபடவென அடிக்கும். இதற்கு ஒரு பக்கம் விட்டமின் குறைப்பாடுகள் காரணமாக இருந்தாலும் எம் மனமும் ஒரு காரணமாகிறது.
இதற்காக இயற்கை கல்ப, அல்லது லேகியம் ஒன்று உள்ளது. அதனை நாமே செய்துகொள்ளலாம். ஆண் பெண் இரு பாலருக்கும் தான் இது போதை தரும் லேகியம் அல்ல புத்துணர்வு தரும் லேகியம். இதற்கு தேவையானவை: மிளகு, வெல்லம், மற்றும் சுத்தமான நெய். செய்முறை: முதலில் அடுப்பில் சட்டியை வைத்து நெய் இரண்டு தேக்கரண்டி அளவு விடுங்கள்.
பின் அதில் மிளகை போட்டு கொஞ்சம் வறுத்து எடுத்து அதனை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அடுப்பில் சட்டியை வைத்து அரை கப் நீர் விடுங்கள்.நீர் கொதித்ததும் அதில் வெல்லத்தை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். பாணி பதம் வரும் போது அரைத்து வைத்திருக்கும் மிளகை போட்டு கிளறி கொண்டே இருங்கள், இரண்டு நிமிடத்தில், நெய்யையும் அதனுடன் சேருங்கள்.
இப்போது தொடர்ந்தும் கிளற வேண்டும் இல்லாவிட்டால் அடி பிடித்துவிடும். ஓரளவு பதமானதும் இறக்கி அளவான சூடு ஒருக்கும் போதே உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். லேகியம் கல்லாகமல் மெதுவாக இருக்க வேண்டுமானால் வெல்லம் பாணி செய்யும் போது அதிக நேரம் முறுக விடாதீர்கள்.
இந்த உருண்டையை காலை எழுந்ததும் ஒரு உருண்டை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.!