" "" "

சிறுநீரில் கிருமி (வைரஸ்) ஆஹ்.? கவலையை விடுங்க இதோ உடனடி தீர்வு.!

சிறு நீர் கடுப்பு என்பது வெயில் காலத்தில் மட்டுமே ஏற்படுகிறது என பலர் நினைப்பதுண்டு. நீர் கடுப்பு எல்லா நேரத்திலும் ஏற்படும். கிருமி தொற்றுக்களால் இந்த சிறு நீர் கடுப்பி ஏற்படுகின்றது.சிறு நீர் கழித்த பின் எரிச்சல், வலி, சிலருக்கு புண், போன்றவை ஏற்படுகின்றது. இதற்கு ஏராளமான மருந்துகள் எடுத்தாலும் சரியான தீர்வு இயற்கை மருத்துவம் மட்டுமே..

பெண்களுக்கு ஓரளவு சமாளிக்க முடிந்தாலும் ஆண்களுக்கு சல கடுப்பு ஏற்பட்டால் துடித்து விடுவார்கள். ஆண்கள் சிலருக்கு மர்ம உறுப்புகள் வீங்கிவிடும். இதற்கு என்ன செய்ய வேண்டும்.!? முதலில் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். சிலர் தண்ணீர் குடிக்க தயங்குவார்கள். தண்ணீர் குடித்து சிறு நீர் வெளியேறும் அளவிற்கு நோயின் தாக்கம் குறையும். அடுத்து காலை எழும்பும் போது உங்கள் நாளை எலுமிச்சை தண்ணீரோடு ஆரம்பியுங்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

காலை எழுந்ததும் ஒரு கப் வெது வெதுப்பான நீரில் பாதி எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருப்பதுடன் சிறு நீர் கடுப்பு, எரிச்சல் போன்றவையும் இருக்காது.இரவில் உறங்கச் செல்லும் முன் பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் சிறிதளவு கலந்து குடியுங்கள். அத்துடன் உணவில், புடலங்காய், கெக்கரிக்காய், வெண்டக்காய், போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஆரஞ்ச், வாட்டர் மெலன், கிரேப்ஸ், போன்ற பழங்களை சாப்பிடுங்கள்.

அத்துடன் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து குளிக்கும் முன்பு மர்ம பிரதேசங்களை கழுவுங்கள். திருமணம் முடித்தவர்கள் தாம்பத்திய உறவுக்கு முன் சிறு நீர் கழிக்காமல் பின் சிறு நீர் கழித்துவிட்டு கழுவுங்கள் இப்படி செய்வதால் கிருமி தொற்றுக்கள் வராது. மர்ம பகுதியில் புண் அல்லது பரு இருந்தால் தண்ணீரில் மஞ்சள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கழுவி விடுங்கள் சீக்கிரமே குணமாகிவிடும்..!!