" "" "

இந்த வார எவிக்‌ஷனில் 15 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருக்கும் இவர் தப்பித்துக் கொள்ள போகிறாராம்!? பிக் பாஸில் முதல் முதல் இத்தனை வாக்குகள் வித்தியாசம் பெற்றது மக்கள் எதிர்ப்பார்க்காத இவர் தான்.!!

இந்த வார நாமினேஷனில் ஆரி, பாலாஜி, சனம்ஷெட்டி, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சோம் சேகர் என 7 பேர் உள்ளனர். இதில் தற்போதைய நிலவரப்படி சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகிய மூவரும் தான் மிகக் குறைவான வாக்குகள் பெற்று இறுதி மூன்று இடத்தில் இருக்கின்றனர். சனம் மற்றும் சோம் சேகர் 4 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நாமினேஷனில் வரும் பாலாஜி மற்றும் ஆரி இடையே பெரிய போட்டிகள் இருக்காது, இருவருக்கும் ஆயிரம் கணக்கில் வாக்குகள் வித்தியாசப் படும். ஆனால் இம்முறை இருவருக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. Unofficial பக்கங்கள் எல்லாவற்றிலும் ஆரியே முதல் இடத்தில் இருக்கிறார். அனைவராலும் இந்த பக்கத்தில் இருக்கும் வாக்குகள் தான் சரியானது எனக் கூறப்படும் பக்கம் ஒன்றில் ஆரிக்கு கிடைத்திருக்கும் வக்குகளின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த பக்கதில் ஹாட் ஸ்டார் பக்கத்தில் போல் 50 வாக்குகள் வழங்க முடியும். இரண்டாவது இடத்தில் இருக்கும் பாலாஜியின் வாக்குகளின் எண்ணிக்கை வெறும் 10 லட்சங்கள் மட்டுமே. இதன் படி பார்த்தால் சுமார் 15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி முன்னிலையில் இருக்கிறார். இது வரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் இந்த அளவு அதிகமாக வாக்கு எடுத்தவர்கள் யாரும் இல்லை.

இதனால் ஆரிக்கு அதிக ஆதரவு உள்ளது என்று கூற முடியாது, காரணம் ஒரே நபர் வேறு வேறு மெயில் ஐடிகளில் வாக்களிக்க முடியும். எப்படி சென்றாலும் ஆரிக்கு பைனலில் இரண்டாம் இடம் தான். முதலிடம் கண்டிப்பாக ரியோக்கு தான் என்பது முடிவாகி விட்டதாம்.!