ஒரே நாளில் பிக்பாஸ் வீட்டின் நிலவரத்தை மாற்றிய லா(லொ)ஸ்லியா – வாக்குகளின் அடிப்படையிலும், விஜய் டீவி, மற்றும் தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலும் லாஸ்லியாவின் அதிரடி சாதனை!! (Exclusive Media Report)

பிக் பாஸ் 3வது சீசன் ஆரம்பமாகி 80 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த 80 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்காத சாதனை இன்று இடம் பெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா வந்ததுமே ஆர்மி ஆரம்பிக்கப் பட்டது.. ஆனால் அந்த ஆர்மி சில நாட்களிலேயே இல்லாமல் போனது.லொஸ்லியாவை அனைவரும் வெறுக்க ஆரம்பித்தனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனால் முகென் மற்றும் தர்சனுக்கான ஆதரவு பெருக ஆரம்பித்தது. சரி இதில் லொஸ்லியா செய்த தவறு என்ன? ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்ட லொஸ்லியா கவினின் காதலில் சிக்கியதும் அனைத்தையும் மறந்தார். அவருக்கு சேரன் அறிவுரை கூறிய போதும் அதனை கேட்கவில்லை, கமலஹாசனும் மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தார். லா(லொ)ஸ்லியா காதில் வாங்கவில்லை.

இதனால் லொஸ்லியாவிற்கான ஆதரவு முற்றிலும் குறைந்து போனது, கடந்த வாரம் நாமினேஷனில் வந்த லொஸ்லியா இந்த வாரம் கேப்டன் ஆனார். இனி நாமினேஷனில் வந்தால் லொஸ்லியா வெளியே தான் என்ற நிலையில் இன்று தமிழில் வெளியான மூன்று சீசன்களின் சாதனையையும் முறியடித்து முன்னணியில் இருக்கிறார் லா(லொ)ஸ்லியா.

ஒரே நாளில் இப்படி முடியுமா? லொஸ்லியாவால் மட்டுமே முடிந்திருக்கிறது. இந்திய அளவில் டுவிட்டரில் ட்ரண்டானது மட்டும் இன்றி ஒரே நாளில் டி ஆர் பியில் கடந்த 3 சீசனிலும் இல்லாத அளவிற்கு அதிகளவான பார்வையாளர்களைப் பெற்று முன்னுக்கு வந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. லொஸ்லியாவின் தந்தை நடந்துகொண்ட முறையே இதற்கு காரணமாக அமைந்தது என்று கூறலாம்.

ஒரு தந்தை எதற்காக கோவப்பட வேண்டும்? பின் தன் மகளை எப்படி தேற்ற வேண்டும் என்பதை லொஸ்லியாவின் தந்தையார் மரியநேசன் இன்று சிறப்பாக செய்தார். இரண்டு தங்கைகள் தாய், தந்தை, என லொஸ்லியாவின் அழகான குடும்பம் வீட்டிற்குள் வந்தது எல்லோரிடமும் நல்ல முறையில் நடந்துகொண்டது.

ஆனால் இன்றுடன் முடியவில்லை, நாளையும் இருக்கிறது, லொஸ்லியாவை வெறுத்த பலர் இன்றைய நிகழ்ச்சியின் பின் நேசிக்க ஆரம்பித்து விட்டனர். காரணம் தாய் தந்தையுடன் இருக்கும் போது லொஸ்லியா உண்மையாக இருந்தார்.

கவினுக்கு இந்த காதல் சின்ன விடயமாக இருந்த போதும் ஒரு நாட்டு மக்களையே சாதாரண பெண்ணுக்கு எதிராக திருப்பிய சாதனை என்றென்றும் கவினை மட்டுமே சேரும். இன்று அம்மா அப்பா சொன்னதை இனி லொஸ்லியா கேட்டு நடந்தால் நிச்சயம் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது..!!