இலகுவாக கிடைக்கும் கத்தரிக்காய் உங்கள் முகப் பருக்களை நீக்கும் என்றால் நம்புவீர்களா.? இப்படி செய்தால் மட்டும் போதும்.!!
என்ன தான் உலகில் பிறந்த எல்லோருமே அழகானவர்கள் தான், அழகில்லாதவர்கள் யாரும் இல்லை, நீயும் அழகு நானும் அழகு என மற்றவர்கள் முன் வீர வசனம் பேசினாலும் நம்ம முகத்த கண்ணாடியில பார்க்கிறப்போ நிச்சயம் கடுப்பு வரும். கறுப்பாக இருந்தாலே நாம் அசிங்கம் என்ற எண்ணம் வந்துவிடும்.
ஆனால் கறுப்பும் அழகு தான் என்பது சிலருக்கு புரிவதில்லை அதனால் இன்று நாம் பார்க்கப் போவது அழகாக இருக்கும் கறுப்பை இன்னும் அழகு படுத்தவும் முகத்தில் இருக்கும் கறுப்பு திட்டுகளை முற்றிலும். நீக்குவது எப்படி என்பது பற்றியும் தான்..! முதலில் நீங்கள் முகத்தில் பருக்கள் இல்லாமல் இலகுவாக வெள்ளையாக மாற முல்தானி மெட்டி சிறிதளவு எடுத்து பாலில் கலந்து பேஸ்ட் பதத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
தக்காளி ஒன்றை எடுத்து பாதியாக வெட்டி முல்தானி மெட்டியில் தொட்டு நன்றாக முகம் முழுவதும் மசாஜ் செய்து 15 நிமிடம் விட்டு முகத்தை கழுவுங்கள். இப்படி 10 நாட்கள் செய்யும் போதே வித்தியாசத்தை உணர்வீர்கள்.. அடுத்து முகத்தை அசிங்கப் படுத்தும் கறுப்பு திட்டுக்களை நீக்குவதற்கு.
கத்தரிக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். கத்தரிக்காயின் ஈர தன்மையை நன்றாக முகத்தில் தேயுங்கள். வட்ட வடித்தில் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். ஈர தன்மையுடன் இருக்கும் கத்தரிக்காய் சிறந்தது. கத்தரிக்காயை முகத்தில் தேய்க்கும் போது ஈர தன்மை இல்லாத பகுதியை வெட்டி நீக்கி விட்டு மீண்டும் மசாஜ் செய்யலாம்.
இப்படி 5 நிமிடம் வரை செய்து பின் 10 நிமிடம் விட்டு வெது வெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள்.! அவ்ளோ தான்..இதனை தொடர்ந்து செய்துவர் முகத்தில் உள்ள பருக்கள் கறுப்பு திட்டுக்கள் முற்றிலும் நீங்கி இயற்கையான அழகை பெற்றுவிடுவீர்கள்….!!