" "" "

இந்தியாவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ இதோ உங்களுக்காக..!!

இந்தியாவை அதிர வைத்த விமான விபத்துக்களில் கடந்த 7ம் திகதி கேரளாவில் நடந்த விமான விபத்தும் ஒன்றாகும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 7ம் திகதி துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையில் ஏற்பட்ட சறுக்கலினால் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் விமானிகள் உட்பட 18 பேர் மரணமடைந்தனர். இந்த விமான விபத்து தொடர்பாக பல விதமான கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் குறித்த விமான விபத்து எப்படி நடந்தது என்பதினை மாதிரி கிராபிக்ஸ் காட்சிகளுடன் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

இதனை சிலர் உண்மையான காட்சிகள் என கூறி வருகின்ற போதும் இது முற்றிலும் அனுமான காட்சிகளாகும். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் சிலர் இந்த் கட்சிகளை பகிர்ந்து முற்றிலும் உண்மை என கூறி வருகின்றனர்..!!

Video Copyrights & Credits Owned by :TheFlightChannel