பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் திடீர் மரணம்.! சோகத்தில் குடும்பத்தினர்.!!
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பிரான்ஸில் மருத்துவதுறையில் கல்வி பயின்று வந்த 2 மாணவிகளில் மரணம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் வசித்து வரும் செல்லத்துரை அவர்களின் மகன் குலேந்திரா அவர்களின் மகளான கார்த்திகா பிரான்ஸில் வசித்து வந்த நிலையில் அங்குள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 08.01.2021 அன்று பிரான்ஸில் அகால மரணமடைந்தார். இந்த தகவல் இலங்கையில் வசிக்கும் அவரது தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சொந்த இடமாகவும் பிரான்ஸில் வசித்து வந்தவருமான சந்திரராசா என்பவரின் மகளான சினேகா 13.01.2021 அன்று திடீர் மரணம் அடைந்துள்ளார்..
பிரான்ஸில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளதுடன் பிரான்ஸ் செவ்ரோன் தமிழ்ச்சோலையின் மாணவியாகவும் இருந்துள்ளார். படிப்பு விளையாட்டு இரண்டிலும் சிறந்தவரான சினேகாவின் மரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!!