" "" "

இரவில் பிரைட் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மரணம்.!! இந்தியாவில் நடந்த சோக சம்பவம்..பெற்றோர்களே ஜாக்கிரதை..!!

ப்ரைட் ரைஸ் இரண்டு குழந்தைகளின் உயிரை பறிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த ஆர்த்தி மற்றும் சந்தோஷ் தொழில் காரணமாக திருப்பூர் தண்ணீர் பந்தல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். சந்தோஷ் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தந்தை செய்யும் ப்ரைட் ரைஸ் மற்றும் நூடில்ஸ்க்கு அவர்களின் குழந்தைகளான பிரையன் மற்றும் மற்றும் அனில் விருப்பமாக இருந்துள்ளனர். குழந்தைகளுக்கு விருப்பம் என்பதால் சந்தோஷ் வேலை முடிந்து வரும் போது பிரைட் ரைஸ் கொண்டு வந்து குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். சந்தோஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வருவது இரவு 11 மணிக்கு என்பதால் குழந்தைகள் தூங்கிவிடும், பின் தூக்கி உணவை ஊட்டி உறங்க வைப்பது தான் சந்தோஷின் வேலை.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சம்பவ தினத்தன்றும் வழமை போல் பிரைட் ரைஸ் கொண்டு வந்துள்ளார். குழந்தைகளை எழுப்பி உணவை ஊட்டி உள்ளார். தூக்க கலக்கத்தில் சாப்பிட்ட குழந்தைகள் அப்படியே உறங்கி உள்ளனர். காலையில் எழுந்த சந்தோஷ் தனது மூத்த மகன் பிரையனை எழும்பியுள்ளார், ஆனால் அவன் அசையாமல் கிடந்ததால் பயந்து போய் வைத்தியசாலை தூக்கி சென்றுள்ளார், அங்கு பிரையன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்,

கதறி அழுத சந்தோஷ் வீட்டுக்கு வந்தபோது நின்றுகொண்டிருந்த குழந்தை அனிலும் திடீரென கீழே விழுந்து இறந்துள்ளார்..இரண்டு குழந்தைகளையும் இழந்த நிலையில் பெற்றோர் கதறி அழ குழந்தைகளின் மரணத்திற்கு பிரைட் ரைஸ் காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். உணவு விசமானதால் குழந்தைகளின் மரணம் நிகழ்ந்துள்ளதால் இரவில் கொடுக்கப் படும் பிரைட் ரைஸ் காரணமாக இருக்கும் என தெரிவித்ததுடன் மருத்துவ அறிக்கை வந்தால் தான் உண்மை தெரியும்.!!