" "" "

இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி அவர்கள் சற்றுமுன்னர் கெல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்திய அணி தேர்வில் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து வந்த கங்குலி பல விமர்சனங்களையும் சந்தித்து வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டத்தை தொடர்ந்து சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் மாரடைப்பு என வைத்தியர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சையின் பின் இது பற்றி அறிக்கை வெளியிடப் படும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.!!