முதல் முதல் வெளியாகி உள்ள கெளதமியின் திருமண புகைப்படம்..! நடிகை கெளதமியின் உண்மையான கணவர் இவர் தான்..!!

வசந்தமே வருக திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை கெளதமி. முதலில் தமிழ் திரைப்படத்தில் நடித்தாலும் தமிழில் வாய்ப்புகள் வரவில்லை, ஆனால் தெலுங்கில் தொடர்ந்து மூன்று படங்கள், பின் கன்னட திரைப்படம் என பிஸியான கெளதமியை குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார் இயக்குனர் முத்து ராமன்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதன் பின் கெளதமி வாழ்வில் வசந்தம் தான். தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ம ஊரு நாயகன், உட்பட நூற்றுக்கு மேட்பட்ட திரைப்படங்களில் நடித்து தள்ளினார். ரஜினி, கமல், ராமராஜன், ரஹ்மான், சரத்குமார், என அன்றைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார்.

அதன் பின் சில திரைப்படங்களில் தொடர்ந்து கமலஹாசனுடன் நடித்தார். அதன் போது இருவருக்குமிடையில் நட்பு மலர்ந்தது. நட்பு காதலானது பின் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து பின் 2018ம் ஆண்டு பிரிந்தனர். இதில் அனைவரும் கேட்கும் ஒரு விடயம் தான் கெளதமியிடம் இருக்கும் மகள் கமலஹாசனின் மகளா என்பது தான்.

கெளதமி சினிமாவில் நடிக்க ஆரம்பித்து சில வருடங்களில் சந்தீப் என்ற நபரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சுப்பு லட்சுமி என்ற மகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பின் கெளதமி தனியாகவே வாழ்ந்தார். . அப்போது உதவிய கமலஹாசன் தான் பின் காதலனானார். இந்த நிலையில் முதல் முதல் கெளதமியின் திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.. இதோ..!