இந்திய முஸ்லீம்கள் இதனை செய்தால் நானும் இதை செய்ய தயார்..! நடிகை காயத்திரி அதிரடி..!!

நடிகை, நடன இயக்குனர் என ஆரம்பத்தில் மக்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை காயத்திரி ரகுராம். ஆனால் அவரை மக்கள் வெறுக்க ஆரம்பித்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின் தான். பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட காயத்திரி ஓவியாவை அதிகம் தொல்லை செய்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அது மட்டும் இன்றி எச்சைகள் என போட்டியாளர்களை திட்டியது, அடிக்கடி கெட்ட வார்த்தை பயன்படுத்துவது என முகம் சுழிக்க வைத்தார். இதனால் மக்கள் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள் . அதன் பின் வெளியே வந்த காயத்திரி அரசியலில் இணைந்தார்.

தற்போது பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் அளித்த போட்டி ஒன்றில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்கட்சிகள் மக்களை தவறான திசைக்கு திருப்புகின்றது. இங்கு அனைத்து நாட்டினருக்கும் குடியுரிமை கொடுக்கிறோம் ஆனால் அவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவில் வாழ்வதற்கான அடையாளங்களை நிரூத்துவிட்டு வாழ்வதில் என்ன தவறு.,,!? நாங்கள் முஸ்லீம்களை வெறுக்கவில்லை. முஸ்லீம்கள் எங்கள் உறவினர்கள் போல் தான். அவர்கள் எம் நாட்டை விட்டு வெளியேறினால் நானும் அவர்களுடன் செல்லத் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்..!!