" "" "

” அவர்களின் போனில் நான் குளிக்கும் வீடியோக்கள் இருந்தது ” 15 வயது சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்..! சித்தப்பாவின் மீதான கோபத்தை சிறுமி மீது காட்டிய இளைஞர்கள்..!!

தமிழகம் வேலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருபவர் திவ்யா ( பெயர் மாற்றப் பட்டுள்ளது ) இவர் நேற்றைய தினம் தற்கொலை முயற்சி செய்த போது அயலவர்களால் காப்பாற்றப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். இதனை தொடர்ந்து பொலீஸார் சிறுமியிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் விடயங்கள் வெளியாகி உள்ளது.

தனது தற்கொலை முயற்சி தொடர்பாக சிறுமி கூறுகையில் வீட்டின் அருகில் உள்ள குளியலறையில் எப்போதும் குளிப்பதுண்டு. இங்கு பெரிதாக பாதுகாப்பு இல்லை, ஆனால் யாரும் வரமாட்டார்கள் என்பதால் குளித்து உடை மாற்றுவேன். அப்படி மாற்றிய போது பாலாஜி, தாமஸ், ஆகாஷ் ஆகியோர் என்னை மொபைல் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். இது எங்களுக்கு தெரியாது. பின் என் சித்தப்பாவிற்கு போன் செய்து வாட்சப்பில் வீடியோ அனுப்பியுள்ளோம் பாருங்கள் என கூற நீ யார் என்று கேட்ட போது தொடர்பை துண்டித்து விட்டார்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சித்தப்பாவின் மொபைலில் வீடியோவை பார்த்த போது அதிர்ந்து போனேன். பின் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தார்கள். சித்தி சித்தப்பா நான் என யாரும் பணம் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கவில்லை. பொலீஸுக்கு போனால் வீடியோவை இணையத்தில் விட்டு விடுவார்கள் என்று பயந்தோம். இருப்பினும் அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை. பின் என்னை வேலூர் கோட்டைக்கு வரும் படி கூறினார்கள், நான் போகவில்லை.

அதன் பின் அருகில் இருக்கும் ஏரிக்கு வர சொன்னார்கள் மனதை திடப் படுத்திக் கொண்டு சென்றேன் அங்கு சென்ற பின் தான் என்னை மிரட்டியது வீடியோ எடுத்தது யார் என அடையாளம் கண்டேன். அங்கு அவர்களுடன் என்னை தப்பாக இருக்க சொன்னார்கள் கோபமடைந்த நான் ஒருவனை இறுக்கி பிடித்த படி கத்தினேன். என் கத்தலால் மற்ற இருவரும் ஓட்டம் பிடித்தனர். இதனை சாட்டாக வைத்து தனியாக நின்றவனிடம் இருந்த போனை பறித்து என் வீடியோவை அழித்த போது நிறைய பெண்களின் வீடியோ இருந்தது.

அதற்குள் அருகில் இருந்தவன் என் தலையில் அடித்து விட்டு ஓடிவிட்டான், அவர்கள் எல்லோருடமும் என் வீடியோ இருக்கிறது. நான் செய்த செயலால் எனது வீடியோவை நிச்சயம் இணையத்தில் வெளியிட்டு விடுவார்கள் என்ற் பயதில் தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என தெரிவித்துள்ளார். குறித்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில் குறித்த சிறுமியின் சித்தப்பாவை பழி வாங்கவே இந்த செயலை செய்ததாக தெரிவித்துள்ளனர்..!!