தந்தையின் அதிக பாசத்தால் துடிதுடித்து இறந்து போன 24 வயது இளம்பெண்..! நீலகிரியில் நடந்த சம்பவம்..!!

இரவில் சென்னைக்கு செல்ல வேண்டாம் என தந்தை கூறியதால் தற்கொலை செய்துகொண்ட மகள் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் கூலி தொழில் செய்து குடும்பத்தினரை கவனித்து வருகிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இவரது மகளான பிரியா என்கிற 24 வயது பெண் கடந்த சில வருடங்களுக்கு முன் துபாய் சென்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி வந்த பிரியா குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இந்த நிலையில் துபாயில் பிரியாவுடன் பணிபுரிந்த தோழி ஒருவரின் தந்தை சென்னையில் இறந்து விட பிரியாவின் தோழி தனது வீட்டிற்கு செல்லும் படி பிரியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு சம்மதித்த பிரியா சென்னை செல்ல தந்தையிடம் அனுமதி கோரியுள்ளார். இதற்கு தந்தை இரவில் தனியாக சென்னைக்கு செல்ல வேண்டாம். எது வேண்டுமாலும் நடக்கலாம் என பிரியாவை தடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியா தோழிக்கு என்ன சொல்வது என தெரியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வாயில் நுரையுடன் துடித்த பிரியாவை வைத்தியசாலை எடுத்து சென்ற சிறிது நேரத்தில் பிரியா மரணமடைந்துள்ளார்..!