" "" "

ஆன்லைன் பணமாற்றத்திற்கான கட்டணம் ரத்து-ரிசர்வ் வங்கி அதிரடி

வங்கிகள் பற்றிய செய்தி-

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆன்லைன் மூலம் செய்யும் NEFT மற்றும் RTGS கான கட்டணத்தை வங்கிகளுக்கு ரத்து செய்துள்ளது. இந்த கட்டணம் ரிசர்வ் வங்கியால் வங்கிகளிடம் வசூலிக்கப்பட்டு வங்கிகள் மக்களிடம் வசூலித்துக் கொண்டு இருந்தனர். தற்போது ரிசர்வ் வங்கி இதை நீக்கி உள்ளது. ஏடிஎம் இல் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் எடுத்தால் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலுகை- எல்லா வங்கிகளிலும் ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப் படும், ஒரு மாதத்திற்கு தன் வங்கியில் 5 முறையும்  பிற வங்கியில் 3 முறையும் எடுத்துக் கொள்ளலாம். அதை விட அதிகமாக கார்டு பயன்படுத்தினால் வரி விதிக்கப்படுகிறது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் ஒரு மாதத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிப்பதில்லை. இவர்கள் வருடத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கிறார்கள். (150 ரூபாய் மட்டுமே)