அவுஸ்திரேலிய மக்களுக்காக கோட்டா அனுதாபம்; தேநீர் வழங்கவும் ஏற்பாடு!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பாதித்துள்ள மக்களுக்கு தமது அனுதாபங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அவுஸ்திரேலியப் பிரதமருடன் நேற்று தொலைபேசியில் பேசியபோதே கோட்டாபாய இந்த அனுதாபங்களைப் பகிர்ந்தார்.

அத்துடன், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய மக்களுக்கு தேநீரை இலவசமாக வழங்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.