உடல் எடையை இலகுவாக குறைக்க ஒரு கப் குடிச்சி வாங்க போதும்..!

உடல் எடை குறைத்தல் என்பது தான் இன்று பலருடைய ஒரே குறிகோளாக இருக்கின்றது. அனைவரும் அதனை தான் விரும்புகின்றனர். அதற்காக பல வித மருத்துவங்களை செய்தாலும் அதிகமானோர் பயன்படுத்தும் டீ கிரீன் டீ தான். கிரீன் டீ இலகுவாக தயாரித்துக் கொள்ள முடிந்தாலும் எல்லோருடமும் கிரீன் டீ வாங்குவதற்கு பணம் இருப்பதில்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதற்கான இலகுவான முறை அதே நேரம் கிரீன் டீயை விட இரண்டு மடங்கு வேகமாக உடல் எடை குறைக்கும் டீயை இப்போது பார்க்கலாம்.இதற்கு உங்களுக்கு தேவையானது கொய்யா இலைகள் 4. எலுமிச்சை பாதி, இஞ்சி பேஸ்ட் சிறிதளவு தேன் அல்லது நட்டு கருப்பட்டி. இவற்றை கொண்டு எப்படி டீ தயாரிப்பது என பார்க்கலாம்.

முதலில் கொய்யா இலைகளை கழுவிக் கொள்ளுங்கள். அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீரை கொதிக்க வைய்யுங்கள். அதில் கொய்யா இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதனுடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வற்ற வைத்த பின் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். இதில் சுவைக்காக தேன் அல்லது நாட்டுக் கருப்பட்டி சேர்த்து கிரீன் டீ போல் குடியுங்கள்.

இதனை காலையில் குடிக்கலாம். அப்படி காலையில் குடிக்க முடியாவிட்டால் மாலையில் குடிக்கலாம். இது கிரீன் டீயை விட இரண்டு மடங்கு சிறந்தது. உடல் எடையையும் சீக்கிரம் குறைக்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பதற்கும் இந்த டீ மிகவும் உதவுகிறது..!