முன் நெற்றி வழுக்கையா..!? என்ன செய்தும் சரி வரவில்லையா? ஒரு முறை மட்டும் இதை செய்து பாருங்கள்..!

தலைமுடி உதிர்தல் சாதாரண விடயம் என மற்றவர்களின் பார்வையில் தெரிந்தாலும் அதன் வலி அனுபவிப்பவர்களுக்கே. தெரியும். அதிலும் முன் நெற்றி முடி உதிர்தல் என்பது மிகப் பெரிய கொடுமை தான். இன்று நாம் இதற்கான மருந்துகள் சிலவற்றை பார்க்கப் போகிறோம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

முன் நெற்றியில் முடி உதிர ஆரம்பித்ததும் விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்யுங்கள். காலை மாலை இரண்டு வேளை முடிந்தால் செய்யுங்கள். அடுத்தது வெங்காயம். பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த சாற்றை இரண்டு விரல்களால் தொட்டு முன் நெற்றியில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே 30 நிமிடம் வரை விட்டு விடுங்கள். அதன் பின் குளியுங்கள். அடுத்து மிளகை எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியில் சிறிதளவு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து முன் நெற்றி பகுதியில் பூசி 30 நிமிடம் வைத்து பின் கழுவி விடுங்கள்.

அடுத்து கொத்தமல்லி இலைகளை எடுத்து அரைத்து நல்லெண்ணை கலந்து தலை முழுவதும் பூசி விடுங்கள் 1 மணி நேரத்தின் பின் கழுவுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் முன் நெற்றி வழுக்கைக்கு தீர்வு கிடைத்துவிடும்..!