அடர்த்தியான நீண்ட கூந்தல் வேண்டுமா.!? ஒரு முறை இதனை முயற்சி செய்து பாருங்கள்…,,!!

புரட்சி வானொலியின் மருத்துவ குறிப்புகள் பகுதியில் இன்று நாம் பார்க்கப் போவது மிருதுவான அதே நேரம் கறுப்பான நீண்ட கூந்தல் வளர்வதற்கான மருத்துவ குறிப்பு ஒன்றினை தான். இது முடி உதிர்தலை தடுப்பதோடு புது முடி வளரவும் உதவுகிறது. இப்போது இந்த குறிப்புக்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

தயிர், ஆலிவ் ஆயில் or ஆமணக்கு எண்ணெய். வாழைப்பழம், முட்டையின் வெள்ளைகரு அல்லது கற்றாழை. செய்யும் முறை. வாழப்பழம் இரண்டை தோல் நீக்கி கட் இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பிரஷ் தயிர் இரண்டு கரண்டி. சேர்கவும். ( புளிச்ச தயிர் வேண்டாம்)

இதில் முட்டையில் வெள்ளைக் கரு சேர்க்கவும். முட்டையின் வெள்ளை கரு பிடிக்காதவர்கள் அதற்காக கற்றாழை ஜெல் 2 கரண்டி பயன்படுத்துங்கள். இவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.இப்போது இந்த கலவையில் ஆலிவ் ஆயில் 3 கரண்டி விட்டு மிக்ஸ் செய்யுங்கள். ஆலிவ் ஆயில் இல்லாதவர்கள்,பாதாம் எண்ணெய்,ஆமணக்கு எண்ணெய்,அதுவும் இல்லாவிட்டாய் தேங்காய் எண்ணெய் பயன் படுத்தலாம்.

கலவையை நன்றாக மிக்ஸ் செய்த பின் தலையில் இதனை அப்ளை செய்ய வேண்டும். தலை முடியை இரண்டாக பிரித்து முடியின் வேரில் இருந்து நுனி முடிவரை பூச வேண்டும். பூசி விட்டு தலை முடியை அப்படியே கொண்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து குழித்துவிட்டு பாருங்கள் உங்கள் தலை முடி பளபளப்பாக இருக்கும்.

வாரத்தில் இரு முறை என ஒரு மாதம் செய்யுங்கள். அதன் பின் பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பித்துவிடும்..!அதாவது முடி உதிர்தல் நின்று முடி கறுப்பாக மாறுவது மட்டும் இன்றி இயற்கையான பளபளப்பான முடியை பெற்றுவிடுவீர்கள்..முக்கிய குறிப்பு: சுவாசம் சம்மந்தப் பட்டவர்கள் இதனை செய்வதை தவிர்கவும். அல்லது ஒரு முறை செய்யும் போது பிரச்சனை ஏற்பட்டால் நிறுத்தி விடவும்..!