" "" "

நடிகர் ஹம்சவர்த்தனின் மனைவியும் நடிகையுமான ரேஷ்மா கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் ! இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்.!!

பிரபல நடிகர் ஹம்சவர்த்தனின் மனைவியும் நடிகையுமான ரேஷ்மா என்கிற சாந்தி நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளார். பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகனான ஹம்சவர்த்தன் நடிகை ரேஷ்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் ரேஷ்மாவின் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பாதித்துள்ளது. தமிழ், கன்னடா, மலையாளம் என நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்..பின் நடிகர் ஹம்சவர்த்தனை திருமணம் செய்துகொண்டார்.

தாலாட்ட வருவாளா திரைப்படத்தில் இறுதியாக நடித்த ரேஸ்மா பின்னர் நடிப்பை நிறுத்திவிட்டார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட ரேஷ்மாவிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. இருபினும் மூச்சு விட கடினப் பட்டு வந்த ரேஷ்மா சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் மரணமடைந்தார். இன்று 2.30 மணிக்கு ரேஷ்மாவின் இறுதி சடங்குகள் இடம்பெற்றது.!!