" "" "

கல்லால் அடித்துக் கொல்லப் பட்ட அப்பாவி இளைஞன்.!! கரூரை அதிர வைத்த கொடூர சம்பவம்.!!

கரூரில் 24 வயது இளைஞர் ஒருவர் ஆவணக் கொலை செய்யப் பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவக் தொடர்பாக தெரியவருவதாவது கொலை செய்யப் பட்ட ஹரிகரன் என்ற இளைஞரின் தந்தையான ஜெயராமன் கரூர் காமராஜர் ரோட் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கிறார். தந்தையின் கடையில் தந்தைக்கு உதவியாக ஹரிகரன் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு நேர் எதிரே வேலன் என்பவர் இரும்பு கடை வைத்திருந்துள்ளார்.

இரு குடும்பமும் வெவ்வேறு ஜாதி, வேலனுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். கல்லூரியில் 2ம் ஆண்டில் கல்வி கற்று வரும் வேலனின் மகளுக்கும் ஹரிகரனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. காதலை கைவிடும் படி பெற்றோர் கூறியும் இருவரும் காதலை ரகசியமாக தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் யுவதி ஹரிகரனுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது பெற்றோர் பார்த்துவிட்ட நிலையில் ஹரிகரனுடன் பேச வேண்டும் என கூறிய பெற்றோர் கோயிலுக்கு வரும் படி கூறும் அடி கூறியுள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பெற்றோர் கூறியதை நம்பி காதலனை அழைத்துள்ளார் காதலி. ஆனால் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பெண்ணின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன்(40), வெள்ளைச்சாமி ஆகியோருடன் மேலும் தந்தை வேலன், சித்தப்பா முத்து ஆகியோர் சேர்ந்து ஹரிகரனை கல்லால் அடித்துள்ளனர். தலை வெடித்து இரத்தம் கொட்டிய நிலையில் கத்தியாலும் குத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே காவல் நிலையம் இருந்துள்ளது. உடனடியாக காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்த போதும் கொலையாளிகளே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.வைத்தியசாலைக்கு செல்லும் முன் ஹரிகரன் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து முத்து மற்றும் வேலன் தவிர்த்து மற்றவர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஹரிகரனின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கூறுகையில் பொலீஸாரும் குற்றவாளிகளின் பக்கமே உள்ளனர். ஹரியின் நடத்தையை தவறாக சித்தரித்து வழக்கை முடிக்க பார்க்கிறார்கள். அப்பாவி இளைஞனை ஆவணக் கொலை செய்துவிட்டார்கள் என கூறியுள்ளனர்.!