பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்த எச்சரிக்கை…!!

இலங்கையில் சில மாவட்ட்ங்களில் டெங்கு நோயின் சீற்றம் குறைந்தும், சில மாவட்ட்ங்களில் டெங்கு நோயின் சீற்றம் அதிகரித்த்தும் காணப்படுகின்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இந்த டெங்கு நுளம்புகள் தீவிரமாக பரவி வருவதோடு, இந்த நுளம்புகள் மக்களையும் பதம் பாத்து வருகின்றது. இதன் சீற்றத்தால் நோயும் தீவிரமாக பரவி வருகின்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

!Advert!

இந்த தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை போன்ற மாவட்டங்களில் இந்த டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த டெங்குக் காய்ச்சல் நோயாளர்கள் குறித்த சில மருந்துகளை குடிப்பதால் அவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

!Advert!

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள், அஸ்பிரின், புருபன், டைக்கிலோபெனாக், சோடியம், மெபனமிக் அசிட் மற்றும் இந்த வகையினைச் சேரந்த ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஸ்ரிரொயிட் வகையினைச் சேர்ந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என பொது மக்களை சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

!Advert!

மேலும் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் தொற்றுள்ளவர்களுக்கு இந்த மருத்துகளை கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். அதனை தொடர்ந்து காய்ச்சலுக்காக தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்திதோடு, டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றதால் மக்கள் மிகுந்த அவதானத்தோடு இருக்குமாறும் தெரிவித்துள்ளது.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.