40 வயதில் 20 வயது போன்ற இளமையுடன் இருக்க வேண்டுமா.!? இதை ட்ரை பண்ணுங்க…!!

நோயில்லாமல் வாழ எல்லோருக்குமே ஆசை இருக்கும். அதற்காக நாம் ஆரோக்கியமானதை பின்பற்றுவதில்லை . இப்படி நோயில்லாமல் வாழ என்ன வழி?? நாம் அன்றாடம் பின்பற்றுவதை ஆரோக்கியமாக செய்தால், வாழலாம்.நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம். அதை ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்தாகவும் இருப்பது அவசியம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

உணவில் அதிகமான நார்ச்சத்து மிக்க உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. கொழுப்பு குறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவித்த உணவுகளை சாப்பிட வேண்டும். பிரெஷ் சாலட், முளை விட்ட தானியங்கள், பழங்கள் போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.

வெள்ளை அரிசியை விட, கைக்குத்தல் அரிசியையும், முழுகோதுமையையும் சேர்க்க வேண்டும்.
தினமும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். கொதித்த நீரை பருகுவது ஆரோக்கியம். தண்ணீர் குடித்தால் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றலாம்.வாரத்தில் மூன்று முறை அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும். புதிய பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.மனதையும் உடலையும் அமைதியாக வைத்திருக்க தியானம், யோகாசனத்தை செய்யவேண்டும்.தீய பழக்கங்களை தவிர்க்கவும். குறிப்பாக புகையிலை, மது, தவறான உணவு முறைகள் என்பவற்றை நீக்க வேண்டும்.நேர்மையான சிந்தனை செய்யவேண்டும்.

மற்றவர்களை பற்றி எதிர்மறையாக பேசக்கூடாது. இது ஆரோக்கியத்தை பாதிக்கும்.ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் முக்கியம். இரவில் தேவையான அளவு தூங்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.