" "" "

விவாகரத்தான மனைவியுடன் திருமணம்..! கணவரின் கண்ணீர் பக்கங்கள்..!!

சென்னை மதுரவாயல் பகுதியில் நபர் ஒருவர் மனைவியின் சகோதர்களால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ப்ரித்விராஜ். இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் 7 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

திருமணம் முடிந்து சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஆனால் சத்தியாவின் சகோதர்கள் விடுவதாக இல்லை. ப்ரித்விராஜை கட்டாய படுத்திவந்தனர். பிரித்விராஜ் அவர்களோ வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு எடுத்திருந்தார்,

இதனை தெரிந்துகொண்ட சத்யாவின் பெற்றோர் பிரித்திராஜை கட்டாய படுத்தி விவாகரத்தான மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்தை விரும்பாத ப்ரித்விராஜ் தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இதன் போது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த நிலையில் விவாகரத்தான முதல் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதாக தெரிவித்துள்ளதோடு வாழவிடவில்லை , அதனால் தற்கொலை செய்துகொண்டேன் என தெரிவித்துள்ளார்..!!