" "" "

இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் மகன் சற்று முன் மரணம்..சோகத்தில் ரசிகர்கள்..!!

இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் மகன் சற்றுமுன் திடீர் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசைஞானி, இசை கடவுள் என இசை பிரியர்களால் கொண்டாடப் படுபவர் இளையராஜா அவர்கள். தனது இசை எனும் மந்திரத்தால் அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போட்ட இவருக்கு நிகர் இவரே தான்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அவரை போல், இவரை போல் என கூறுபவர்கள் இசைஞானி போல் இசையமைக்கிறார் என்று யாருக்கும் சொல்ல மாட்டார்கள், அப்படி சொல்லவும் முடியாது, இசைஞானியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இளையராஜா போல் இளையராஜாவின் சகோதர்கள் , மற்றும் அவர்களின் பிள்ளைகளும் சினிமாவில் சாதித்தவர்கள் மற்றும் சாதித்துக் கொண்டிருப்பவர்கள் தான்.

கங்கை அமரன், அதே போல் இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் ஆகியோரும் சினிமாவுடன் தொடர்புடையவர்கள் தான். இன்றைய தினம் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் மைந்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

இவர் நாலு பேரும் ரொம்ம நல்லவங்க என்ற திரைப்படத்தை இயக்கி வந்ததுடன் உதவி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்துள்ளார்..!!